Header Ads

வலியை உணர்த்திய வானொலி! -சிறுகதை (ஜெயஸ்ரீ பொன்னம்பலம்)

✍️ | ஜெயஸ்ரீ பொன்னம்பலம். (சிறுகதை எழுத்தாளர்.)


அன்று இரவு,

இலேசான சாராலோடு மழை தூரிக் கொண்டிருந்தது.வீட்டின் அலமாரியில் தேனிசை நிகழ்ச்சி மிதமான ஒலியில் ரேடியோப் பெட்டியில் ஒலித்துக்கொண்டிருந்தது. வீட்டில்  உள்ளவர்கள் அதனைக் கேட்டவாறே  அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வீட்டின் கடைக்குட்டி அந்த மழையில் நனைந்தப்படி அவனது வண்டியை வாசலில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.எப்போதும் திமிராகவே அவனது செயல்கள் இருக்கும். அப்போது அவனது அம்மா.

அவனிடம் தினமும் வண்டியில் தான் கல்லூரிக்கு போகிறாய்,ரோட்டில் கவனமாக போய்ட்டுவரனும்,என்று சில அறிவுரைகளை கனிவாக எடுத்துரைத்தாள்.

(அவன் திமிராகவே அவனது அம்மாவைப் பார்த்து)

இன்னைக்கு,“நான் வேகமாக வண்டியில்  போய்ட்டு இருந்தப்ப ஒரு குருடன் இடையில் வந்துட்டான்.அடிச்சு தூக்கிப்போட்டுப் போயிருப்பேன்",என்று பார்வையற்றோரைப் பற்றி ஏளனமாக அவனது  அம்மாவிடம் கூறினான்.அவனது அம்மா,

“அப்படியெல்லாம் சொல்லாத,அவர்களும் நம்மைப் போல ஓர் உயிர் தான்.அவர்களையும் நாம் மதித்து நடத்தவேண்டும்”.என்று அவனிடம் கூறிக் கொண்டிருந்தப்போது,

[அவனது அக்கா இடையில் வந்து,]

“தம்பியைக் குறை சொல்லிட்டே இருக்காதீங்க,அவன் என்ன செய்தாலும் சரியாக தான் இருக்கும்”, என்று அவன் செய்த தவறை எடுத்துக்கூறாமல்,அவனை தவறு செய்ய தூண்டும் வகையில் அவனுக்கு ஏற்றவாறு பேசுகிறாள்.

இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே...!!!

கரண்ட் போய்விட்டது.

(நல்ல சகுனம் என்றார் அம்மா.அதற்கு அவன் கரண்ட் போய்விட்டாள் எல்லாரும் கெட்ட சகுனம் என்பார்கள்.ஆனல் இப்படி கூறுகிறீர்கள் என்று மொனங்கினான்.)

அந்த இருட்டுக்குள் அமர்ந்திருந்ததால் ரேடியோவின் ஒலி சற்று அதிகமாக இருந்தது.ரேடியோவில் நடக்கும் நிகழ்ச்சியை வீட்டில் உள்ளவர்கள் கவனித்துக்கொண்டிருந்தனர்.


[ரேடியோவில் நடந்த அந்த நிகழ்ச்சிக்கு ஒரு பார்வையற்றோர் விருந்தினராக வந்திருந்தார்.]

 நிகழ்ச்சி  தொடங்கிய சில நிமிடங்கள்....

தொகுப்பாளினி,எதிரில் உள்ள பார்வையற்றோரிடம் “உங்களுக்கும் பார்வையுள்ளவர்களுக்கும் இடையில் நடந்த சுவாரசியமான நிகழ்வு ஏதும் இருந்தால் எங்களுடன் பகிருங்கள்”என்று அவரிடம் கேட்கிறாள்.

அதற்கு அவர்,சில மனிதர்கள் எங்களிடம் அன்பாகவும் கனிவாகவும் நடந்துகொள்வார்கள்.ஆனால் சில இளைஞர்களும், மனிதர்களும் எங்களை மிகவும் இழிவாக கேளி, கிண்டல் செய்து ஏளனப்படுத்துவார்கள்.இந்த நிகழ்ச்சி மூலம் நான் பார்வையுள்ள மனிதர்களுக்கு ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன் என்று, “பார்வையுள்ள மனிதர்களாகிய நீங்கள் அனைவருமே மிகவும் கொடுத்து வைத்தவர்கள். உங்கள் வாழ்க்கை எப்போதும் ஒளிப் பொருந்தி இருக்கும்.ஆனால் எங்களின் வாழ்வோ பிறப்பிலிருந்தே காரிருளுக்குள்ளே இருக்கும். நீங்கள் எங்களுக்கு உதவுங்கள் என்று கேட்கவில்லை. எங்களையும் ஓர் உயிராகவும், உணர்வாகவும் மதியுங்கள்” என்று மிகவும் மனம் வருந்தி பேசினார்.

[கரண்ட் மீண்டும் வந்துவிட்டது]

அந்த நிகழ்ச்சியை அவன் கேட்காததுபோல், உடனே ரேடியோவை நிறுத்தினான்.

பிறகு அவனது அம்மா, இப்போது தான் நானும் கூறினேன்.அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று பார்.இனிமேல் அவர்களை மதிக்கவேண்டும் என்று கூறுகிறாள்.

அதனைக் கேட்ட அவன்,அன்று நடந்ததை எண்ணி,தான் செய்தது தவறு என்று உணர்ந்தான்.

கருத்து:

நண்பர்களே......!!!

பார்வையற்றவர்களுக்கும் உணர்வு மற்றும் ஓர் வாழ்கை இருக்கிறது.அதற்கு நீங்கள் உதவிக்கரமாக இருக்காவிட்டாலும், அவர்களின் உணர்வுகளை மதித்து நடக்கும் நல்ல மானுடர்களாய் இருங்கள்.

No comments

Powered by Blogger.