லீடர் தமிழின் முக்கிய செய்திகள்
* திருவள்ளூர் மாவட்டம் வெள்ளாத்துக் கோட்டை பகுதியில், ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது. மூர்த்தி என்பவருக்கு பட்டா வழங்க ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் பெற்றபோது, விஏஓ மோகனப்பிரியா கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
* முருகன் குறிச்சி பகுதியில் இரு தரப்பினரிடையே மோதல் ஆள்மாறாட்டத்தில் ஒருவருக்கு வெட்டு ஒருவர் தப்பி ஓட்டம். மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டி கேட்டதால் தகராறு. சிறு காயம் மட்டுமே .சம்பவ இடத்தில் காவல்துறை விசாரனை.
* கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியை அடுத்த குப்பச்சிபாறை என்ற இடத்தில் இன்று எருது விடும் திருவிழா நடைபெற்று வருகிறது. 200க்கும் மேற்பட்ட எருதுகள் இந்த விழாவில் பங்கேற்றுள்ள நிலையில் அருகிலுள்ள ஆழமான கிணற்றில் எருது ஒன்று தவறி விழுந்து உயிரிழப்பு. தீயணைப்புத் துறையினர் கிணற்றில் தவறி விழுந்த எருதை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
* திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் திருக்கோயில் வெளியே உள்ள ஆதிசேஷ தீர்த்தகுளத்தில் நேற்று இரவு தெப்பத் திருவிழா நடைபெற்றது.
* சசிகலா மருத்துவமனையில் இருந்து வந்த உடனே அவரை பார்ப்பேன்; அதுதான் தார்மீகம்!" கருணாஸ்.
* உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21.14 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,214,208 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 102,586,386 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 74,284,138 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 109,440 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* மகாத்மா காந்தியின் 74வது நினைவுதினத்தையொட்டி மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் மரியாதை செலுத்தினார். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
* சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்வி சுகாதாரத் துறைக்கு மாற்றம் இனி அந்த கல்லூரிக்கு கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி என அழைக்கப்படும் மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக தமிழக அரசு அதிரடி நடவடிக்கை.
* 'ராணா' படத்தின் கதையை மீண்டும் கேட்டார் ரஜினி. மிகவும் நல்ல ஸ்க்ரிப்ட் என்று பாராட்டினார். உடல் நலம் பெற்றவுடன் பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறார். - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.
* திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கலாம் - மத்திய உள்துறை அமைச்சகம் புதிய தளர்வு அறிவிப்பு.
* எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை, அதிமுகவினரால் முதல்வராக்கப்பட்டவர் - பிரேமலதா விஜயகாந்த்.
* தமிழகத்திற்கு ₹1803 கோடி விடுவிப்பு. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத்தொகையில் தமிழகத்திற்கு ₹1803 கோடி விடுவிப்பு. 18 மாநிலங்களுக்கு ₹12,351 கோடி உள்ளாட்சி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
* ஜனவரி 27 வரை, கோழி பறவைகளுக்கு கேரளா, ஹரியானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரகண்ட், குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய 9 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி உள்ளதை உறுதி செய்யப்பட்டுள்ளது! மீன்வளத்துறை அமைச்சகம், கால்நடை பராமரிப்பு & பால் வளர்ப்புத்துறை!!
* டெல்லி கலவரம் தொடர்பாக இதுவரை 37 விவசாய சங்க தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்!!
* கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க கேரள முதல்வர் முடிவு.
No comments