ஆட்சிக்கு வந்தபின் ஒரு மீனவரை தொட்டால் கூட பதவியிலிருந்து விலகிவிடுவேன்! -சீமான்
ஆட்சிக்கு வந்தபின் ஒரு மீனவரை தொட்டால் கூட பதவியிலிருந்து விலகிவிடுவேன், பத்திரிக்கையாளர்கள் குறித்து வைத்துக் கொள்ளவும், 22 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திமுக 100 நாட்களில் பிரச்சனையை தீர்த்து விடுமா நாம் தமிழர் சீமான் பேட்டி!!!
தமிழகத்தில் நாம் தமிழர் ஆட்சிக்கு வந்ததும் மீனவர் மீது தாக்குதல் நடைபெற்றால் சீமான் பதவி விலகி விடுவதாக, தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் சூலூர் சின்னியம்பாளையத்தில் கோவை நீலகிரி ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
வட இந்தியாவில் ஒரு மீனவர் இறந்தால் மத்திய அரசு போர் பதட்டத்தை உண்டாக்கி இருக்கும், சாகும் மீனவர் தமிழராக இருப்பதால் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது, வேளாண் சட்டத்திற்காக போராடும் விவசாயிகளை அடிப்பது என்பது கொடுங்கோள் ஆட்சிக்கு வித்திடும். டெல்லியில் போராடும் விவசாய போராட்டம் ஒட்டுமொத்த இந்திய மக்களின் போராட்டமாக கருத்தில் கொள்ள வேண்டும்.
சசிகலா வெளியே வரட்டும் பின்னர் அரசியல் ஈடுபடும் பொழுது அது குறித்து கருத்து தெரிவிக்கலாம். திமுக 22 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தது அப்போது தீர்க்காத பிரச்சனையை 100 நாட்களில் தீர்த்து விடுமா என கேள்வி எழுப்பினார்.
மக்களுக்கான பிரச்சனையை திமுகதான் இவர்கள் அரசியல் இருந்து விலகி விட்டால் மக்களுக்கு பிரச்சனை தீர்ந்து விடும். நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தபின் ஒரு மீனவரை தொட்டால் கூட ஆட்சியிலிருந்து பதவியிலிருந்து விலகிவிடுவேன் பத்திரிக்கையாளர்கள் குறித்து வைத்துக் கொள்ளவும்.
கேரளா மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் உடனடியாக கைது செய்கிறது அந்த அரசு. 7 பேர் விடுதலை ஆளுநர் கையெழுத்திட்டு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
மொழி இனம் வேண்டுமென்றால் நாம் தமிழருக்கு வாக்களிக்க வேண்டும். அதி பயங்கரவாதிகள் நாட்டை ஆளும் போது நாட்டு மக்களும் பயங்கரவாதிகளால் தான் இருப்பார்கள். அப்படியிருக்கும் போது செங்கோட்டையின் விவசாயிகள் கொடிதான் பறக்கும். மத்திய அரசுதான் மிகப்பெரிய பயங்கரவாதி விவசாய சட்டங்களுக்கு அரசு பொறுப்பேற்காது என்று சொன்னால் மத்திய அரசு அரசா இல்லை தருசா என கேள்வி எழுப்பினார்.
பாமகவின் இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு நாம் தமிழர் ஆதரவு தெரிவிப்போம் பாமக நிறுவனர் ராமதாஸ் எப்போதும் கொள்கையிலிருந்து விலகுவது இல்லை. மெரினா கடற்கரையை சுடுகாடாகவும் இடுகாடாகும் திராவிடக்கட்சிகள் மாற்றி விட்டனர் என தெரிவித்தார்.
No comments