Header Ads

லீடர் தமிழ் செய்தி துளிகள்...! பாரதிய ஜனதா வெற்றி பெற்ற 04 தொகுதிகளின் மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும்.


* விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனம். மாநகராட்சி அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம். அனுமதியில்லா கட்டுமானங்களை ஆரம்ப நிலையிலேயே தடுக்க வேண்டும். சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

* தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் மறுஅறிவிப்பு வரும் வரை கடனை வசூல் செய்ய தடை விதித்தது தமிழக அரசு.

* இந்தியாவில் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும்..!
- உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

* கொரோனா உதவியாக இந்தியாவுக்கு ரூ.110 கோடியை வழங்குகிறது டுவிட்டர்..!

* பாரதிய ஜனதா வெற்றி பெற்ற 04 தொகுதிகளின் மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும்-எல்.முருகன் அறிவிப்பு.

* மாணவர்களின் எதிர்காலம் என்பதால் மிகுந்த கவனத்துடன் முடிவெடுக்க வேண்டி உள்ளது என்று 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை நடத்தியபின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார் 

* தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை நுழைய விடமாட்டோம் என உயர்கல்வித் துறை அமைச்சர் திரு பொன்முடி அவர்கள் ஊடகங்களுக்கு  பேட்டியளித்துள்ளார். 

* ஜாக்டோ-ஜியோ சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு - பத்திரிக்கைச் செய்தி 10.05.2021

* ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அனைத்து தேர்வுகளும் மே 25 முதல் நடத்தப்படும் - தமிழக அரசு.
ஆன்லைன் தேர்வுகள் 3 மணி நேரம் நடைபெறும் எனவும் அறிவிப்பு. 

* கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து. தேர்வுகளை மீண்டும் நடத்த முடிவு 

* திருப்பத்தூர் மாவட்டத்தில்  கொரோனா நிவாரண தொகை வழங்க  ஆசிரியர்களுக்கு நியாயவிலை கடைகளில் பணி - மாவட்ட ஆட்சியர் உத்தரவு 

* கொரோனா நிவாரணத் தொகையாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு  முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி 15ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

* தங்கள் துறைகளில் பதவி உயர்வு, பணி மாறுதல் வெளிப்படையாக இருக்க வேண்டும். 10 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லாத நிலையில் மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும். புள்ளி விவரங்கள் அனைத்தையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.
தவறு செய்தால் பணி நீக்கம் செய்யப்படுவர் என முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை.

* கிராமப்புறங்களில் உள்ள மாணவியருக்கு ஊட்டச்சத்து அயோடின், வைட்டமின் ஏ குறைபாடு அதிகரித்து வருவதால் அரசு பள்ளிகளில் 9 முதல் 12 வரை பயிலும் மாணவியருக்கு மாதவிடாய் கால ஆரோக்கியம் & மேலாண்மை திட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


No comments

Powered by Blogger.