லீடர் தமிழ் செய்தி துளிகள்...!
* தமிழக ஊரடங்கு - கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவித்தது அரசு. நாளை முதல் டீக்கடைகள் இயங்க அனுமதி இல்லை.
* காய்கறி, மளிகை கடைகள் நாளை முதல் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி. - தமிழக அரசு.
* அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்புத் தொகை சம்பளம் நிறுத்தி வைப்பு. 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை ஈட்டிய விடுப்புத் தொகை நிறுத்தி வைப்பு. கொரோனா நிதிச்சுமை காரணமாக தமிழக அரசு அறிவிப்பு.
* தனியார் ஆம்புலன்ஸுக்கு கட்டணம் நிர்ணயம்:
10 கிலோமீட்டருக்கு 1,500 ரூபாய் கட்டணம், அடிப்படை மருத்துவ வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸுக்கு 10 கிலோமீட்டருக்கு 2000 ரூபாய் கட்டணம். அதி நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸுக்கு 4000 ரூபாய் கட்டணம் நிர்ணயம். - தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு.
* ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டது.
* அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.பாலமுருகன் பெரியகுளத்தில் காலமானார். உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த ஓ.பாலமுருகன் திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று நேற்று இரவு வீடு திரும்பிய நிலையில் காலமானார்.
* ரேஷனில் கொரோனா நிவாரணப் பொருட்களாக 13 மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்க தமிழக அரசு திட்டம் எனத் தகவல். கோதுமை மாவு, உப்பு, ரவை, சர்க்கரை, புளி, உளுத்தம் பருப்பு, கடுகு, மஞ்சள் தூள், மிளகாய் பொடி, குளியல் மற்றும் துணி சோப் தரத் திட்டம்.
No comments