1330 திருக்குறளையும் ஒப்புவிக்க, மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தலா ரூ.10,000 ஆயிரம் பரிசுத் தொகை!
திருக்குறள் முற்றோதல் போட்டி
-மகிழ்மதி.
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் திருக்குறள் முற்றோதல் போட்டி ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இப்போட்டிக்கு 2020 - 2021 ம் ஆண்டிற்கு பள்ளி , கல்லூரி மாணவ/மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2018 - 2019 ம் ஆண்டு கால முதல் ஒவ்வொரு ஆண்டும் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்க, மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருக்குறள் முற்றோதல் போட்டி நடைபெறுகிறது. இந்தப்போட்டியில் 70 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.10,000 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் மாணவர்களை திறனறி குழுவினரால் திறனாய்வு செய்யப்பட்டு, தகுதியானவர்களை பாரிசுக்கு பரிந்துரைக்கப்படுவர். இதற்கான திறனாய்வு திருநெல்வேலி மண்டல தமிழ் வளர்ச்சி துணை இயக்குனரால் நடத்தப்படும். போட்டியில் பங்கேற்பவர்கள்
1330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகார எண், பெயர், குரல் எண் போன்றவற்றை தெரிவித்தால் , அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்பு பெயர்கள், சிறப்புகள் ஆகியவற்றையும் அறிந்திருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இந்த போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்த பரிசை பெற்றவர்கள் மீண்டும் பங்கேற்க கூடாது.
போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ/ மாணவியர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியகத்தின் 2 ம் தளத்தில் இயங்கும் மண்டலத் தமிழ் வளைச்சி துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பபடிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சி துறையின் வலைத்தளத்திலோ (www.tamilvalarchithurai.com) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது குறித்து மேலும் விவரங்களுக்கு 0462 - 2502521 என்ற என்னில் மண்டலத் தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
No comments