இதற்குமுன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பல உயரிய விருதுகளை தமிழக அரசு வழங்கவுள்ளது.😱😱😱
1. திருவள்ளுவர் விருது - 2021 (திருக்குறள் நெறி பரப்புவோருக்கு)
2. மகா கவி பாரதியார் விருது - 2020 (பாரதியின் படைப்புகள் அனைத்தையும் முழுமையாக பயின்று ஆய்வு மேற்கொண்டு பாரதியாரை பற்றிய கவிதைகள் மற்றும் பாரதியின் புகழ் பரப்பும் வகையில் கவிதை, உரைநடை நூல்கள் படைத்தோர், பிற வகையில் தொன்டு செய்தோர் மற்றும் செய்பவர்களுக்காகவும்)
3. பாவேந்தர் பாரதிதாசன் விருது - 2020 (சிறந்த கவிஞருக்கு)
4. தமிழ் தென்றல் திரு.வி.க. விருது - 2020 (சிறந்த தமிழ் எழுத்தாளருக்கு)
5. கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - 2020(சிறந்த தமிழ் அறிஞருக்கு)
6. பெருந்தலைவர் காமராசர் விருது - 2020 (கல்வியில் தமிழ் மக்களுக்கு தொண்டாற்றி வரும் ஒருவருக்கு)
7. பேரறிஞர் அண்ணா விருது - 2020 (தமிழ் சமுதா முன்னேற்றாம் காண அயராது பாடுபடும் ஒருவருக்கு)
இவ்விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன. விண்ணப்ப படிவம் தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிப்பவர்கள் தன் விவர குறிப்புகளுடன் நிழற்படம் இரண்டு, எழுதிய நூல்களின் பெயர்பட்டியலுடன் ஒவ்வொரு நூல்களின் ஒரு பிரதியை கீழ்கண்ட முகவரிக்கு 30.09.2020 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி:
தமிழ் வளர்ச்சி இயக்குனர்,
தமிழ் வளர்ச்சி இயக்கம்,
தமிழ் வளர்ச்சி வளாகம், முதல் தளம்,
தமிழ் சாலை,
எழும்பூர், சென்னை - 600 008.
மேலும் விபரங்களுக்கு 044-28190412, 044- 28190413
மின்னஞ்சல்: tamilvalarchithurai@gmail.com
உங்களது உறவினர்கள், நண்பர்கள் யாருக்கேனும் இதுபோன்ற விருது கிடைத்தால் அவர்களை கொளவுரவித்து மேலும் அவரது பணியில் சிறந்து விளங்கிட உதவியாக இருக்குமென்று நினைத்தால் அவர்களிடம் தெரிவித்து மற்றவர்களுக்கும் பகிரவும். சமூக ஊடகம் மூலம் அனைவர்க்கும் சென்றடையட்டும் குறிப்பாக கிராமபுறங்களுக்கும்.
தமிழன் என்று சொல்லடா 🙏.. தலை நிமிர்ந்து நில்லடா...💪
- முகன்.
No comments