Header Ads

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை (அரியலூர் மாவட்டம்)


அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்றுவரும் 
பயனாளிகள் ஆண்டுக்கு ஒருமுறை தாங்கள் பணியில் இல்லை என்பதற்கான சுய உறுதிமொழி ஆவணத்தினை ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கத்திலும் சமர்பிக்கப்படவேண்டும்.

தற்போது கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக சுய உறுதிமொழி ஆவணத்தினை ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரையிலான காலத்திற்கு சமர்ப்பிக்க இயலாத பயனாளிகளுக்கு கால அவகாசம் ஆகஸ்ட் 2020 வரை நீட்டிப்பு செய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

எனவே, சுய உறுதிமொழி ஆவணம் சமர்பிக்காத வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்ட பயனாளிகள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம் தொடர்பான ஒதுக்கீட்டு ஆணை, சுய உறுதிமொழி ஆவணம், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகியவற்றினை இணைத்து அஞ்சல் வழியாக 31.08.2020-க்குள் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்திற்கு அனுப்பிவைக்குமாறு மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி த. ரத்னா, இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
Powered by Blogger.