Header Ads

கோவிட் -19க்கு பிறகு அச்சுத் தொழில் (Printing Industry) சமாளிக்க போகும் பிரச்சனைகள்😱😞 😱

(படம்: இணையம்.)

 - முகன். 👦

கடந்த 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு மின்னணு ஊடகம் (கணினி, கைபேசி) வேகமாக வளர தொடங்கிய கால கட்டம் முதல் அச்சு துறை  (செய்தி பத்திரிகை, பதிப்பக நிறுவனங்கள்) விற்பனையிலும், பிரதிகளை அச்சடிக்கும் எண்ணிக்கையும் குறைய தொடங்கியது. வாசகர்களும் அதிகம் இணையத்தை பயன்படுத்த தொடங்கினர். இதனால் அச்சு பிரதிகள் ஆன்-லைன் பதிப்புகளாக மாறி மின்னணு ஊடகத்துடன் இணைந்து தன் நிலையை தக்க வைத்துக்கொண்டது.

இதில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்டேஷனரி அச்சு தொழிலும் (Stationary Printing) காலண்டர், டைரி, வாழ்த்து மடல்கள், காகித பைகள், ஃப்ளையர், சிறு கையேடுகள், ஸ்டிக்கர் மற்றும் பேனர் போன்ற அணைத்து விதமான அச்சு தொழிலும் விதிவிலக்கல்ல. இவைகளும் தற்போது ஈ.நேம் கார்டு, ஈ.வாழ்த்து மடல்கள், ஈ. அழைப்பு மடல்கள் என மாறிவருகின்றன.

இன்று வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் இணையம் சார்ந்த ஊடகமான கணினி மற்றும் கைபேசி மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், போக்குவரத்து, வணிகம் போன்ற அனைத்து வகையான துறைகளிலும் இதன் தேவை அபரீதமானது.

இந்த வளர்ச்சியை கண்டு பிரமித்திருக்கும் நாம் ஒன்றையும் நினைவில் கொள்ள வேண்டும் இதனால் ஏற்பட்ட பாதிப்புகளால் இழந்த வேலைவாய்ப்புகள். அச்சு துறையில் அதிக லாபம் ஈட்ட முடியாவிட்டாலும் அச்சு அடிக்கும் நிறுவனங்கள் தொழிலை தொடர்ந்து நடத்தி வந்துகொண்டிருந்தனர்.

இந்த துறையை பற்றி உலகளவில் தொழில் வல்லுநர்கள் கூறுகையில்,  தற்போது உள்ள உலகளாவிய தொற்று நோய் (கோவிட் -19) பரவலால் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அச்சடிக்கும் தொழில் நிறுவனங்கள் சிக்கல்களையும், இழப்புகளை சந்தித்துள்ளது. இனி வரும் காலங்களில் இதன் தாக்கம் எப்படி இருக்கும் எனறு நாம் சிந்திக்க வேண்டும். தொழில் நிறுவங்கள் ஆள் குறைப்பு, சமபளம் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

தொழிலாளர்கள் இந்த நிலையைப் புரிந்துகொண்டு நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பை கொடுத்தால் வேலையையும், குறைவான வருமானத்தையாவது தற்போது தக்கவைத்து கொள்ளமுடியும். இந்த கிருமி தொற்று  அனுபவம் அச்சுத் துறையை எப்படி வேண்டுமாயின் மாற்றலாம். சில மாற்றங்கள் நேர்மறையாகவும், சில எதிர்மறையாகவும் தீர்மானிக்கப்படலாம்.

தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொள்ளும் பொது,  தொடர்புகள், வேலை நேரம் ஆகியவற்றை நிறுவனங்கள் மாற்றியமைத்து செயல்பட்டு வருகின்றன. திருமண நிகழ்வுகள், அரசியல், அலுவலகம் மற்றும் வணிக கூட்டங்கள் குறைவான நபர்கள் கலந்துகொண்டு நடைபெறுகின்றன.  போட்டோ ஸ்டுடியோ, டிஜிட்டல் பிரின்டிங் நிறுவனங்கள் பல மாதங்களாக நிறைய இழப்புகளை சந்தித்துள்ளன.

2019 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்த இடத்திற்குத் திரும்ப இன்னும் 10 ஆண்டுகள் ஆகலாம் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்..

மேலும் இது பற்றி உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடவும்.


No comments

Powered by Blogger.