கொரோனா 19 - காதல்💘
✍ | -மகிழ்மதி.
நான் தான் கார்த்திக். என்னால அவளை மறக்க முடியல. அவளை பார்த்து 10 வருஷம் முடிஞ்சிட்டு. ஆனால் அவ நியாபகமாவே தான் இருக்கு.
ஆமாங்க என்னோட ஸ்கூல் லைப்ல ஒரு பொண்ண பார்த்தேன். அவ பேரு கயல்விழி என்னோட வகுப்பு தோழி. அவ ரொம்ப அழகா இருப்பா. ஆனால் அவ கூட மட்டும் நன் பேசுனதே கிடையாது.
பள்ளி முடிஞ்சி கல்லூரி முடிஞ்சி வேலைக்கு வந்த பிறகும் அவ நெனப்பு எப்போதுமே என் மனசுல இறுத்துட்டே தான் இருக்கு. நான் இந்த அளவுக்கு அவள காதலிக்குறேனு அவளுக்கு தெரியாது. இப்படி 10 வருஷம் முடிஞ்சிட்டு. அவ இப்போ எப்படி இருக்குறா, என்ன செய்றா , அவட்ட எப்படியாது பேசணும்.
ஒருவழியா என்னோட பள்ளி நண்பன் ஒருத்தனிடம் கயல்விழி நம்பர் வாங்கிட்டேன். எப்படி பேசனு ரொம்ப தயக்கமா இருக்கு. ஆனாலும் பேசியே ஆகணும் எப்படியாது. போன் பண்றன் ஆனால் அவள் எடுக்கல கடுப்புல அப்டியே போன் வச்சிட்டேன். 5 நிமிடம் கழித்து அவள் போன் பண்ணுனா. எனக்கு ஒன்னுமே ஓடல அட்டென்ட் பண்ணி பேசுனேன். அவ யாருன்னு கேட்டா நான் தான் கார்த்திக் உன்னோட வகுப்பு தோழர்னு சொன்னேன்.
அவ உடனே ஹாய் கார்த்திக் எப்படி இருக்கனு கேட்டா. நான் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்கேனு கேட்டேன். நல்லா இருக்கேன் கார்த்திக். நீ என்ன பண்ணிட்டு இருக்க கார்த்திக்னு கேட்டா, நான் ஒரு கதையாசிரியர் சினிமாக்கு எழுத முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.
நீ என்ன பண்றனு கேட்டேன். நான் டாக்டர் கார்த்திக்னு சொன்னா. என்ன இவ்ளோ நாள் கழிச்சி திடீருனு கால் பண்ணிருக்கனு கேட்டா, இன்னைக்கு உனக்கு பர்த்டே அதான் விஷ் பண்ண கால் பண்ணுனேன்னு சொன்னேன்.
கார்த்திக் என் பர்த்டே உனக்கு நியாபகம் இருக்கானு கேட்டா. மறக்கலனு மட்டும் சொன்னேன். ஓகே கார்த்திக் எனக்கு ஷிபிட் டைம் ஆகிடுச்சு பைனு சொல்லிட்டு வச்சிட்டா
அன்னைக்கு முழுவதும் நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன். நைட் நான் மெசேஜ் பண்ணுனேன் அனால் அவன் ரிப்ளை பண்ணல அவளுக்கு என்னை பிடிகளையோனு நெனச்சிட்டு நன் போன் வச்சிட்டேன்.
5 நிமிடம் கழித்து அவ வீடியோ கால் பண்றா. எனக்கு என்ன செய்யனு புரியல. 10
வருஷம் கழிச்சி அவளை பார்க்க போறோம்னு தயக்கம் எனக்கு இருந்தாலும் அட்டெண்ட் பண்ணி பேசுனேன்.
இப்போ தான் ஒர்க் முடிஞ்சிது கார்த்திக் உன்ன பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அதான் வீடியோ கால் பண்ணுனேன். அவளை பார்க்க தேவதை மாதிரி இருந்தா. நான் பார்த்துட்டேதான் இருந்தேன். கார்த்திக் பெரிய பையனா வளந்துட்ட… அப்டினு கேட்டா என்ன பார்த்து
நான்
சிரிச்சிக்கிட்டேய் நீயும் தான்னு சொன்னேன். எனக்கு ஒரு கதை சொல்லு கார்த்திக்னு கேட்டா. நான் எழுதுன கதை சொல்லட்டானு கேட்டேன் ஓகே சொல்லுனு சொன்னா
நானும் சொன்னேன் ரொம்ப நேரம் அப்படி சிரிச்சி பேசிட்டே இருந்தோம். கிளாஸ்ல எல்லாருக்குடையும் பேசுவ என் கூட மட்டும் பேச மாட்ட ஏன் கார்த்திக்? அது அப்படி தான் கயல்னு சொன்னேன். அதுக்கு அவ ஓகே ஓகேனு சொன்னா
அப்புறம் அடிக்கடி போன் பண்ணுனோம் பேசிட்டேய் இருந்தோம் இந்த லாக் டோவ்ன் நேரத்துல நாங்க தான் ரொம்ப சந்தோசமா இருந்தோம்
அவ ஷிபிட் நேரம் போக மீதி நேரம் முழுவதும் பேசிட்டே தான் இருப்போம். எப்படியாது என்னோட காதல் சொல்லணும்னு அவட்ட கதை சொல்லற மாதிரி அவட்ட மறைமுகமாக என்னோட காதல் சொன்னேன்.
அதுக்கு அவ தைரியமா என்னோட கண்களை பார்த்து காதல் சொல்லணும் அப்போ தான் பொண்ணுங்களுக்கு பிடிக்கும்னு சொல்லிட்டா. ஸ்கூல்ல நடந்த நிறைய விஷயம் பேசினோம். இவ்ளோ நாள் எங்கடா போன ஏன்டா என்கிட்ட பேசலனு கேட்டா. அவ அப்படி கேட்டது எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு
எப்படியாது என்னோட காதல் அவ கண்ணை பார்த்து சொல்லணும்னு முடிவு பண்ணிட்டேன். அவளுக்கு கால் பண்ணுனேன் அவ போன் அட்டென்ட் பண்ணுனதும் கார்த்திக் எனக்கு கொரோனா பொசிட்டிவ் நான் 14 நாள் தனியா இருக்கணும் கார்த்திக்னு சொன்னா எனக்கு ஒரு நிமிஷம் உயிரிய போயிட்டு இருந்தாலும் அவளுக்கு நான் இருக்கேனு தைரியம் சொன்னேன்.
5த் நாள் அவ குரல் மாறிட்டு ரொம்ப கஷ்ட பட்டா. அவள நேர்ல போய் பார்க்கணும்னு ஆசை என்னால பார்க்க முடியல இங்க லாக் டோவ்ன். கயல்ட பேசாம என்னால இருக்க முடியல எப்படியாது இந்த 10 நாள் சீக்கிரமா போய்டணும். அவளை எப்படியாது சிரிக்க வைக்கணும் அவளுக்கு பிடிச்சது செய்யணும்னு தோணுச்சு. அவளுக்கு கால் பண்ணுனேன் எனக்கு பிரியாணி சாப்பிடனும்னு ஆசையா இருக்கு கார்த்திக்னு சொன்னா
அவளுக்கு பிரியாணி ஆர்டர் பண்ணுனேன். என்கிட்ட பேசிட்டேய் இருக்கும் போதே பிரியாணி டெலிவரி பண்ணிட்டாங்க. அவ வாங்கிட்டு நீ தான கார்த்திக்னு கேட்டா. நான் சிரிச்சேன் நல்ல சாப்பிடுனு சொன்னேன். அவ ரொம்ப இரும்பா ஆற மிச்சிட்டா அவளுக்கு முன்னாடி மாதிரி பேசவே முடியல நர்ஸ் வாங்கி அவங்க இனிமே டிஸ்டர்ப் பண்ணாதீங்க அவங்களுக்கு முடியலனு சொல்லிட்டாங்க
ரொம்ப கஷ்ட பட்டு கையல்ட்ட பேசாம இருந்தேன். ஒரு வழியா 14 நாள் முடிஞ்சிட்டு. அவளுக்கு போன் பண்ணுனேன் அவ போன் ஸ்விட்ச்சேட் ஆப். அப்புறம் அவ இருக்குற ஹாஸ்பிடல் நம்பேற்கு போன் பண்ணி பேசுனேன்.
சாரி சர் அவங்க இறந்துட்டாங்கனு சொல்லிட்டாங்க. என்னால தாங்கிக்கவேய முடியல. என் காதலை கடைசி வரை உன் கிட்ட சொல்ல முடியாம போச்சேனு ரொம்ப அழுதேன்.
வாட்டஸ் ஆப்ல வீடியோ ஆன் பண்ணி நான் உன்னை 10 வருஷமா காதலிக்கிறேன் கயல். ஒரு நாள் கூட உன் கிட்ட சொல்ல எனக்கு தைரியம் வந்ததே இல்லை கயல். என்னை ஏமாத்திட்டியே கயல் என்ன விட்டு ஏன் போனனு வீடியோ அனுப்பிட்டேன்.
அப்படி அழுதுட்டே இருந்தேன் 10 நிமிடம் கழித்து என்னாச்சு கார்த்திக்னு எனக்கு மெசேஜ் வந்துச்சு. உடனே ஹாஸ்பிடல்க்கு போன் பண்ணுனேன் அவங்க சார் இப்போ தான சொனேன் அவங்க இறந்துட்டாங்கனு. மேடம் அவங்க மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் வந்துச்சுனு சொன்னதும் அப்படியா நீங்க என்ன கயல் சொன்னிங்க இங்க 2 கயல் இருகாங்க.
அவளே போன் பண்ணிட்டா, கயல் உனக்கு ஒன்னும் இல்லையே? நீ நல்லா இருக்கேல…! எனக்கு உயிரே போயிட்டு கயல். கார்த்திக் பயந்துட்டியானு கேட்டா
கயல் உனக்கு பிடிக்கலைன்னா பிரண்ட்ஸ ஆஹ இருந்துக்கலாம்னு சொன்னேன். நீ பேசும் போதே உன் மனசுல நன் இருக்கேன்னு புரிஞ்சிக்கிட்டேன் ஆனால் அந்த வீடியோ பார்த்த பிறகு தான் எந்த அளவுக்கு லவ் பண்றனு தெரிஞ்சிது கார்த்திக்