Header Ads

மயிலாடுதுறை அருகே விநாயகர் சிலை வைத்த 3பேர் மீது வழக்கு

 

 ✍  |   ராஜாமதிராஜ்

கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதை  முன்னிட்டு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடவும்   விநாயகர் ஊர்வலத்திற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  மயிலாடுதுறை பகுதிகளில் விநாயகர் சிலைகள் செய்து விற்பனை செய்துவருபவர்கள் வாழ்வாதாரம் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில்  முன்கூட்டியே அட்வான்ஸ் தொகை வாங்கி சிலை செய்துள்ள வியாபாரிகள் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.பிள்ளையாரை நீர்நிலைகளில் கரைக்கும்போது தண்ணீரை மாசுப்படுத்தாமல் இருக்க சுற்றுச்சூழல் வழிகாட்டுதல்படி காதிக்கூழ் மற்றும் கிழங்கு மாவினால் தயாரிக்கப்பட்டுள்ள சிலைகள் இந்த ஆண்டு விற்பனையாக வில்லை என்றால் அவற்றை இருப்பு வைத்திருக்க இயலாது.

அவைகள் தானாகவே செரித்துவிடும் தன்மை வாய்ந்தது. பிளாஸ்ட்டர் ஆஃப் பாரிசில் தயாரித்தால் 10 ஆண்டுகள் ஆனாலும் அழிந்துபோகாது.  சுற்றுச்சுழல் வழிகாட்டுதலின் படி சிலைகள் தயார் செய்தவர்கள் செய்வதறியாமல் தவித்துவருகின்றனர்.   நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் காவல்துறையினர் மயிலாடுதுறை அருகே சிபுலியூரில் கோயில் முன்பாக 9 அடி சிலை மற்றும் கடலங்குடியில் 6 அடி உயர சிலை வைத்திருந்த 3 பேர் மீது மணல்மேடு போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர்.  உடனடியாக சிலைகள் அகற்றப்பட்டு அவரவர்களது வீடுகளில் வைக்கப்பட்டுள்ளது.  

மயிலாடுதுறை கடைவீதியில் குறைந்த உயரங்கொண்ட சிலைகள் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.  இருந்தும் காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.