Header Ads

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை முன்னேற்றம் அடைய வேண்டி கூட்டு பிரார்த்தனை

 

✍ | -வெங்கட்.

உலகெங்கும் இசை ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தீவிர மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், ஒரு வீடியோ மூலமாக அதை தெரிவித்துவிட்டு, மருத்துவ மனையில் அட்மிட் ஆனார்.

தொடக்கத்தில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. வென்டிலேட்டர் மற்றும் எக்மோ ஆகிய உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை முன்னேற்றம் அடைய வேண்டி கூட்டு பிரார்த்தனைக்கு இயக்குனர் பாரதிராஜா அழைப்பு விடுத்தார். ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இதற்கு ஆதரவு கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து கூட்டு பிரார்த்தனை நடக்கிறது.

No comments

Powered by Blogger.