எஸ்பி பாலசுப்ரமணியம் விரைவாக குணம் அடைய வேண்டி மன்னார்குடியில் இசைக்கலைஞர்கள் பிரார்த்தனை
✍ | ராஜாமதிராஜ்.
திரைப்படப் பின்னணி பாடகர் எஸ்.பி . பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய வேண்டி மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் தீபமேற்றி இசைக்கலைஞர்கள் பிரார்த்தனை செய்தனர்.
திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் உடல் நலம் பெற வேண்டி திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா, தேவா, உள்ளிட்ட திரையுலகத்தினர்,
மற்றும் பல்லாயிரக்கணக்கான அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
அந்தவகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இசைக்கலைஞர்கள் ஒன்று சேர்ந்து ஹரித்ராநதி தெப்பக்குளம் வடகரையில் நெய் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.
இந்த நிகழ்வில், மன்னார்குடி கலைவாணி சபா தலைவர் டாக்டர் சி.அசோக்குமார், சின்னத்திரை கலைஞர் இண்டேன் ராஜகோபால், ரோட்டரி சங்க துணை ஆளுனர் மனோகரன், திரைப்பட நடிகர் எஸ்எம்டி. கருணாநிதி, மெல்லிசைக் கலைஞர் எம்.ராஜேந்திரன், திரைப்பட பின்னணி பாடகி அனு ஆனந்த், இசைக் கல்லூரி பேராசிரியர் ஜெயந்தி, ஆன்மீக சொற்பொழிவாளர் நாராயணன்,
இளம் தவில் கலைஞர் அமிர்தவர்ஷினி, மற்றும்மெல்லிசைக்கலைஞர்கள் பாரதி பிரகாஷ், ராஜா, சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர்.
முடிவில் ஆசிரியர் ராஜப்பா நன்றி கூறினார்.
No comments