முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களா கொலை வழக்கில் குற்றம் 6 பேருக்கு பிடிவாரண்ட்......
✍ | ராஜாமதிராஜ்.
முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ம் ஆண்டு நடந்த கொலை கொள்ளை வழக்கினை 3 மாதத்திற்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் இன்று 27ம் தேதி ஆஜராக மாவட்ட நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் இன்று கோவை மத்திய சிறையிலுள்ள சயான், வாளையார் மனோஜ், இரண்டு பேர் மற்றும் ஜம்சிர் அலி,மனோஜ் சாமி ஆகிய நான்கு பேர் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து. ஆஜராகாத 6 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி வடமலை வழக்கின் மறு விசாரணையை வரும் செப்டம்பர் 3 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
No comments