ரூ 70லட்சத்தில் 2 நெல் கொள்முதல் நிலையங்களை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் திறந்துவைத்தார்.
✍ | ராஜாமதிராஜ்.
திருவண்ணாமலை மாவட்டம் விவசாயம் மிகுந்த மாவட்டமாக விளங்கி வருகின்றன.
இந்த மாவட்டத்தில் விவசாயிகள் நேரிடையாக நெல் விற்பனை செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.
இதனால் இடைதரகர்கள் கொள்ள லாபத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லை விலைக்கு வாங்கி சென்று அரிசி ஆலைக்களுக்கு அதிகளவில் விலையில் கொடுத்து லாபம் ஈட்டி வந்தனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தச்சூர், வண்ணாங்குளம் ஆகிய 2 கிராமத்தில் விவசாயிகள் நலன் பெற சுமார் 70லட்சம் மதிப்பீட்டில் நெல் கொள்முதல் நிலையத்தை தமிழக இந்து சமய அறநிலை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் ரிப்பன் வெட்டி நெல் கொள்முதல் இயந்திரத்தை இயக்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
No comments