வேளாங்கண்ணியில் மூடப்பட்ட கடைகளும் முடியாத பணிகளும்
✍ | ராஜாமதிராஜ்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய திருவிழா ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8ம் தேதி திருவிழா முடிவடையும்.
பொதுவாக திருவிழா என்றாலே 20 நாட்களுக்கு முன்பே பல்வேறு பணிகள், தங்கும் அறைகள், பேராலயம் புதுப்பித்தல், வண்ண விளக்குகள் அமைத்தல், தனியார் விடுதிகள் தயார் படுத்துதல் போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும். மாவட்ட நிர்வாகம், வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகம் போன்றவை பல்வேறு சிறப்பு ஏற்பாடு செய்யும்.
ஆனால் கொரோனா தொற்று என்பதால் கடைகள், தங்கும் விடுதிகள் அனைத்தும் கடந்த 4 மாதத்திற்கு மேலாக மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. தரைக்கு அடியில் கேபிள் பதிக்கும் பணி சானல சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன.
பொலிவுடன் காணப்படும் வேளாங்கண்ணி தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனால் வரும் 29-ம் தேதி கொடியேற்றம் நடைபெறும் என்று பேராலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
K
ReplyDelete