Header Ads

மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்வதில் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை

✍ | ராஜாமதிராஜ்

கல்வராயன்மலை பகுதியில்  மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை -கல்வராயன்மலையில் மரவள்ளி கிழங்கு தொழிற்சாலை அமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை.!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் மரவள்ளி கிழங்கு பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.மரவள்ளி கிழங்கு பயிரிட்ட நாளிலிருந்து சுமார் 10 முதல் 12 மாதங்களுக்கு பிறகு மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.மரவள்ளி கிழங்கு பயிரிடுவதற்கு ஒரு ஏக்கருக்கு சுமார் 10,000 செலவு செய்து ஒரு ஆண்டிற்கு பிறகு சாகுபடி செய்து மரவள்ளி கிழங்குகளை பறித்து அதனை லாரியில் ஏறிக்கொண்டு 60 கி.மீ தொலைவிலுள்ள  சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வியாபாரிகளிடம் விற்பனை செய்யும் போது அடிப்பட்ட விலைக்கு விவசாயிகளிடம் கிழங்கு பெற்றுக்கொள்வதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கல்வராயன்மலை பகுதி விவசாயிகளின்  நலன்கருதி கல்வராயன்மலை பகுதியின் மையப்பகுதியான கரியாலூர் அல்லது வெள்ளிமலையில்  தமிழக அரசு சார்பில் மரவள்ளி கிழங்கு தொழிற்சாலை (அ) மரவள்ளி கிழங்கு கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் விவசாயிகள் தமிழக அரசிற்கு  கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.