Header Ads

அரியலூர் மாவட்ட மக்கள் பண்ணை உபகரணங்கள் இலவசமாக பெற விரும்புவோர் விண்ணப்பிக்கவும்

அரியலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் 2020-21ஆம் ஆண்டிற்கான மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இறவையில் தீவன சோளம் மற்றும் வேலிமசால் வளர்த்தல், ஒருங்கிணைந்த தீவன புல் பத்திகள் அமைத்தல் மானாவாரியில் தீவன சோளம் மற்றும் காராமணி வளர்த்தல், புல் வெட்டும் கருவி வழங்குதல் போன்ற பணிகள் செயல்படுத்தப்படவுள்ளது.


ஆகவே, இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் அரியலூர் மாவட்டத்தில்  நிலம் இருக்கும் கால்நடை வளர்ப்பவர்கள், அந்தந்த பகுதி எல்லைக்குட்பட்ட கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களை பெற்று உரிய படிவத்தில் தங்களுடைய புகைப்படம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், கைபேசி எண், தங்கள் பெயரில் உள்ள நிலத்திற்கான சான்று மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வாங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றோடு 25.08.2020க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தில் சிறு குறு விவசாயிகள், ஆவின் கூட்டுறவு ஒன்றிய உறுப்பினர்களை சேர்ந்தவர்கள், இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற்றவர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. த.ரத்னா, இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Powered by Blogger.