பள்ளி மாணவர்கள் இயற்கை விவசாயம் செய்து விடுமுறை நாட்களை பயனுள்ள தொழில் கல்வியாக பயின்று வருகின்றனர்.
✍ | ராஜாமதிராஜ்
மன்னார்குடி அருகே பைங்காநாடு கிராமத்தில் பள்ளி மாணவர்களான அன்னான் தங்கை இருவர் இயற்கை விவசாயம் செய்து கொரோனா விடுமுறை நாட்களை பயனுள்ள தொழில் கல்வியாக பயின்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உலகம் முழுவதும் ஊரடங்கு நீடிக்கும் நிலை இன்றும் முடியாத நிலையில் பள்ளி கல்லூரி மாணவர்களும் கல்வி பயில முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பெரு நகரங்களில் தங்கி கல்வி பயின்ற மாணவர்கள் பலர் சொந்த ஊர் திரும்பி கிராமத்து வாழ்க்கையை வாழ தொடங்கியிருக்கின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பைங்காநாடு கிராமத்தை சேர்ந்த விவசாயி மகன் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவரது தங்கை பைங்காநாடு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
கொரோனா விடுமுறை நேரத்தில் வீட்டிலிருந்த இவர்கள் காலையில் எழுந்தவுடன் பெற்றோருடன் சேர்ந்து அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் செடிகளுக்கு நீர் பாய்ச்சுவது கலையெடுப்பது போன்ற பணிகளை செய்து பெற்றோருக்கு உதவியாக இருந்துள்ளனர். தங்களது பிள்ளைகள் இருவரும் சிறு வயதிலேயே தாவரங்கள் செடி கொடிகள் வீட்டில் உள்ள செல்ல பிராணிகள் மீது கொண்டுள்ள ஆர்வத்தக்தை கவனித்த அவரது பெற்றோர்கள் இருவருக்கும் விதை தெளிப்பது நிலத்தை சமன்படுத்துவது போன்ற விவசாய பணிகளை கற்றுக்கொடுக்க தொடங்கினர்.
இதனால் தங்கள் வீடு சமையலுக்கு தேவையான வெண்டை அவரை தக்காளி என பலவகையான காய்கறிகள் கீரைவகைகளை முற்றிலும் இயற்கை முறையில் அன்னான் தங்கை இருவரும் பயிர்செய்தனர். அனுபவம் வாய்ந்த விவசாயிகளை போல மண்வெட்டியை கொண்டு நிலத்தை சமன்படுத்துவது. பாத்தி அமைத்து செடிகளுக்கு நீர் பாய்ச்சுவது இயற்கை பூச்சி விரட்டியை பயன்படுத்வது போன்ற நுட்பங்களை தங்கள் சொந்த நிலத்தில் பெற்றோரிடம் கேட்டு கற்று விவசாய பணிகளை செய்ய தொடங்கியுள்ளனர் “சிறுவர் விட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது” என்ற வாக்கை பொய்யாகும் வகையில் பள்ளி பயிலும் சின்னசிறுவர இருவர் விவசாய தொழிலை ஆர்வமுடன் செய்து வருவது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பெரும் உந்து சக்தியாக இருக்கிறது.
நவீன கல்வி முறையும் கிராமங்களையும் விட்டுவைக்காத நவநாகரீக வாழ்க்கை சூழல் போன்றவற்றால் விளையாட்டு விவசாயம் என நம் முன்னோர்கள் கற்றுத்தந்த பல நல்ல செயல்கள் பெரும்பாலும் மறைந்து அங்கொன்றும் இங்கொன்றும் மாக மீண்டும் பழமையில் புதுமை புகுத்தியும் பழமை மாறாமல் பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும் தொடங்கியுள்ளனர்.
விவசாயத்தை தொழிலாக செய்து வருபவர்களும் படித்த இளைஞர்களும் தற்போது விவசாயத்தை விரும்புகின்றனர். இந்நிலையில் பெற்றோர்கள் தங்கள் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு விவசாய முறைகளை கற்றுக்கொடுப்பது அவர்களின் உடல் மனம் சார்ந்த ஆரோக்கியத்தையும் நல்ல எதிர்காலத்தையும் இயற்கை மீதான பற்றையும் வளர்க்கும் என்பதால் அனைவரையும் இயற்கை விவசாயம் செய்ய அழைக்கின்றனர்.
Super
ReplyDelete