துப்புரவு பணியாளர்கள் வைத்து காஃபி ஷாப் திறந்த முதலாளி.....
✍ | ராஜாமதிராஜ் .
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் புதிய காஃபி ஷாப் திறந்த கடைக்காரர் ஒருவர் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக கோரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ள தூய்மை பணியாளர்களை அழைத்து அவர்களை கவுரப்படுத்தி முதல் விற்பனையை தொடங்கி வைத்த செயல் அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுதல்களை பெரும் வகையில் அமைந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் அஜித் மற்றும் முருகன், நண்பர்களான இவர்கள் இருவரும் தங்களது அயராத உழைப்பின் காரணமாக முன்னேறி சொந்தமாக காஃபி ஷாப் தொடங்கிய நண்பர்கள் தங்களின் புதிய கடையின் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக கோரோனா தடுப்பு பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தூய்மை பணியாளர்களை அழைத்தனர், தயக்கத்துடன் திறப்பு விழாவிற்கு வருகை தந்த தூய்மை பணியாளர்களை கடைக்குள் அழைத்து சென்று அமர வைத்த கடை உரிமையாளர்கள் முதல் விற்பனையை தூய்மை பணியாளர்களை வைத்து தொடங்கினார், சமூகத்தில் பலர் தங்களை ஒதுக்கி வைக்கும் நிலையில் தங்களை வைத்தே முதல் விற்பனையை தொடங்கி அசர வைத்த கடைக்காரரின் செயலால் நெகிழ்ந்து போன தூய்மை பணியாளர்கள் கடை உரிமையாளர்களை மனதார வாழ்த்தினர், மேலும் கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்த தூய்மை பணியாளர்களுக்கு பரிசு பொருட்கள், உணவு, மற்றும் நிதி உதவி வழங்கி கௌவுரவிக்கப்பட்டது.தங்கள் கடை திறப்புவிழாவிற்கு வி ஐ பி க்கள் வரவேண்டும் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் வரவேண்டும் என நினைக்கும் கடைக்காரர்கள் மத்தியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை அழைத்து அவர்களுக்கு பெருமை சேர்த்த கடைக்காரர்களின் செயல் அனைத்து தரப்பு மக்களின் பாராட்டை பெற்று உள்ளது.
No comments