Header Ads

யாசகம் பெற்ற பணத்தில் செய்த உதவியால் கிடைத்தது விருது

| -வெங்கட்.

யாசகம் பெற்ற பணத்தை ஒரு முறை அல்ல. 8 முறை யாசகர் பூல்பாண்டியன் ரூ. 10 ஆயிரம் , 10 ஆயிரமாக கொரோனா நிவாரண நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார். கொரோனா நிவாரண நிதியாக இதுவரை யாசகம் எடுத்த பணத்தில் இருந்து ரூ. 90,000 நன்கொடை வழங்கி இருக்கும் யாசகர் பூல்பாண்டியன். மாவட்டக் கலெக்டர் வாயிலாக முதல்வர் நிவாரண நிதிக்கு இந்த நன்கொடையை பூல்பாண்டியன் கொடுத்து இருந்தார்.


இதையடுத்து சுதந்திர தினத்தன்று பூல்பாண்டியனுக்கு விருது கொடுத்து கவுரவிக்க அவரது பெயரையும் சுதந்திர தின விருது பட்டியலில் ஐந்தாவது இடத்தில் கலெக்டர் வினய் சேர்த்து இருந்தார். ஆனால், பூல்பாண்டியன் யாசகம் எடுப்பவர் என்பதால், அவரை ஒரு இடத்தில் இருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு அந்த நாளில் விருதும் கொடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் ஒன்பதாவது முறையும் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நிவாரண நிதி கொடுப்பதற்காக பூல்பாண்டியன் வந்து இருந்தார். அப்போது அவர் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு கலெக்டர் வினய் விருது வழங்கி கவுரவித்தார்.

No comments

Powered by Blogger.