மன்னார்குடி அருகே குன்னியூர் கிராமத்தில் டாஸ்மார்க் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை பூட்டிவிட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
✍ | ராஜாமதிராஜ்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே குன்னியூர் கிராமத்தில் அரசு மதுபான கடை இன்று காலை திறக்கப்பட்டது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குன்னியூர் கிராம மக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கடையின் முன் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், திறக்கப்பட்ட கடையை இழுத்து மூடி கடைக்கு பூட்டு போட்டனர் கடையை இப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர் இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டூர் காவல் ஆய்வாளர் அறிவழகன் திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் அன்பழகன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர் நாளைய தினம் தமிழக முதல்வர் திருவாரூர் பகுதிக்கு வர இருக்கும் சூழலில் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக காவல் ஆய்வாளர்கள் உறுதி அளித்தனர் இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
No comments