சிங்கப்பூரில் வேலைவாய்ப்பை பெறுவதற்கு, வெளிநாட்டினர் இனி பல சவால்களை எதிர்கொள்ளவேண்டிவரும்.
✍ | முகன்
சிங்கப்பூர் அரசு, இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளத்தை உயர்த்தியுள்ளது. இதனால் வெளிநாட்டு தொழிலாளர்களை எடுப்பதில் முதலாளிகளுக்கு கூடுதல் செல்வாகும்.
இதுகுறித்து சிங்கப்பூர் மனிதவள அமைச்சர் ஜோசபின் தியோ கடந்த புதன்கிழமை (26-08-2020) அன்று கூறுகையில், சிங்கப்பூரில் தற்போது நிலவி வரும் பொருளியல் பிரச்சனை மற்றும் உள்ளூர் வாசிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காகவும் இது போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. முதிய, அதிக அனுபவம் வாய்ந்த ஊழியர்களைப் பொறுத்த வரையில் ஊதியம் இன்னும் அதிகமாக உள்ளது. இனிவரும் நாட்களில் வேலைவாய்ப்பு பாஸ் மற்றும் எஸ் பாஸுக்கு விண்ணப்பிப்பவர்கள் புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டிவரும்.
கொவிட்-19 காரணமாக ஆட்குறைப்புகள் அதிகமாகி வருகின்றன. சிங்கப்பூரர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் இடையில் வேலைகளைப் பெறுவதில் போட்டி அதிகரிப்பதால் கவலையும் கூடி வருகிறது. தற்போது, அரசு மற்றும் தனியார் துறைகளில் உயர் பதவிகளில் சிங்கப்பூரார்கள் அதிகம் இருக்கின்றனர். இந்த விகிதம் மற்ற நாடுகளை காட்டிலும் சிங்கப்பூரில் அதிகம்.
பொருளியலை உயர்த்துவற்கு உலகத்துடன் நாம் இணைந்து இருந்தாலும், கொவிட்-19 நெருக்கடி காரணமாக சிங்கப்பூரர்களை முதலாளிகள் நியாயமாக நடத்த வேண்டிய தேவை முன்பைவிட இப்போது முக்கியமானதாக ஆகி இருக்கிறது. மேலும் பல்வேறு அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து 100 000 வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது என்று அவர் கூறினார்.
No comments