Header Ads

வங்கக் கடலில் கடற்படை பயிற்சி.. அமெரிக்கா, ஜப்பானோடு ஆஸி.யை அழைக்கும் இந்தியா! கோபத்தில் சீனா?


 ✍️ | மகிழ்மதி.

சீனாவுடன் எல்லை மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், வருடாந்திர மலபார் கடற்படை பயிற்சிக்கு ( malabar exercise) அமெரிக்கா, ஜப்பானை மட்டுமல்லாது ஆஸ்திரேலியாவுக்கு அழைப்புவிடுக்கிறது இந்தியா. இது சீனாவை கோபப்படுத்தியுள்ளது. 

2004ஆம் ஆண்டு சுனாமி பாதிப்பை ஏற்படுத்திய பிறகு, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து இந்தோ பசிபிக் மண்டலத்தில் ஒருவருக்கொருவர் உதவி செய்வது என்று முடிவு செய்தன. இதன்பிறகு 2017ம் ஆண்டு இந்த இணக்கம் அதிகரிக்கப்பட்டது.

மலபார் கடற்படை பயிற்சி என்பது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 2015ஆம் ஆண்டு இதில் ஜப்பான் நிரந்தர கூட்டாளியாக சேர்க்கப்பட்டது

ஆஸ்திரேலியாவும் இணைப்பு 

ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் நிரந்தரமில்லாத கூட்டாளிகளாக இணைந்தனர். வழக்கமாக, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் மலபார் கடல் பகுதியில் பயிற்சிகளை மேற்கொண்ட நிலையில், இந்த வருடம், ஆஸ்திரேலியாவை இதில் பங்கேற்க வைப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சீனாவுடன் பிரச்சினை 
இந்த நான்கு நாடுகளும் சேர்ந்து வங்கக்கடலில் தங்கள் கடற்படையுடன் பயிற்சியில் ஈடுபட உள்ளன. இந்த நான்கு நாடுகளுக்குமே சீனாவுடன் பிரச்சினைகள் உள்ளன. எனவே, ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது சீனாவை கோபப்படுத்தும் என்று தெரிகிறது.

கடல் ஆதிக்கம் 
இந்தியா முதல் ஆஸ்திரேலியா வரையிலான கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த சீனா விரும்புகிறது. ஆனால், இந்தியா நடத்தவுள்ள மலபார் கடற்படை கூட்டு பயிற்சி, சீனாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தும் என்று தகவல்கள் கூறுகின்றன.

அடுத்த வாரம் அழைப்பு 
ஆஸ்திரேலியா பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், மலபார் பயிற்சிக்கு தங்கள் நாடு இன்னும் அழைப்பைப் பெறவில்லை என்றாலும், ஆஸ்திரேலியா, இந்தியாவுடன் உறவை பேணுவதற்கு விரும்புகிறது என்று தெரிவித்துள்ளார். அடுத்த வாரத்தில் இந்த அழைப்பு ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




No comments

Powered by Blogger.