ஆளுநர் மற்றும் முதல்வர் தமிழக மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து...
✍ | ராஜாமதிராஜ் .
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழக ஆளுநர் பண்வாரி லால் புரோகித் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
விநாயகரின் அவதாரத் திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்களில் களிமண்ணால் ஆன சிலைகளை வைத்து வழிபடுவர். ‘வினைகளின் வேரையே களைந்தெறியும் வல்லவர் விநாயகர்’ என பதினோறாம் திருமுறையில் பாடப்பட்டுள்ளது.
விநாயகர் அருளால் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று மகிழ்வுடன் மக்கள் வாழ வாழ்த்துகள்.
தமிழக மக்களுக்கு சிறப்பான, வளமாக எதிர்காலம் அமைய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். விநாயகர் சதுர்த்தி திருநாள் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம், நல்ல உடல்நலத்தை வாரி வழங்கட்டும்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளார்.
No comments