அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹரிஷ் பேசிய தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் தேடும் அமெரிக்கர்கள்………
✍ | ராஜாமதிராஜ் .
அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி துணை அதிபா் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரிஸ் அதிகாரப்பூா்வமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு வாஷிங்டனில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இதில், இந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபா் தோ்தலில் துணை அதிபா் பதவிக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக கலிஃபோர்னியா மாகாண செனட் சபை உறுப்பினா் கமலா ஹாரிஸ் அதிகாரப்பூா்வமாக தோ்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம், அமெரிக்காவில் அந்தப் பதவிக்கான வேட்பாளராகத் தோ்ந்தெடுக்கப்படும் முதல் இந்திய அமெரிக்கா் மற்றும் கருப்பினத்தைச் சோ்ந்த முதல் பெண் என்ற பெருமைகளை பெற்றுள்ளார் கமலா ஹாரிஸ்.
நவம்பா் மாதம் 3-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில், குடிரயசுக் கட்சி வேட்பாளரான அதிபா் டொனால்ட் டிரம்ப்பை ஜனநாயகக் கட்சி வேட்பாளராக முன்னாள் துணை அதிபா் ஜோ பிடன் எதிர்கொள்கிறார் .துணை அதிபா் பதவிக்கு போட்டியில் குடியரசுக் கட்சி வேட்பாளரான தற்போதைய துணை அதிபா் மைக் பென்ஸை கமலா ஹாரிஸ் எதிர்கொள்கிறார்.
துணை அதிபா் வேட்பாளா் தோ்வை ஏற்று அவா் ஆற்றிய ஏற்புரையில், பேசிய கமலா ஹாரிஸ், தேசத்துக்காக உழைத்தாலும் தனது குடும்ப நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்போவதாகக் குறிப்பிட்டார் தமிழகத்தில் பிறந்த தனது தாயை கமலா ஹாரிஸ் நினைவு கூர்ந்தார்.
அப்போது, தனது கணவா், குழந்தைகள் உள்ளிட்ட உறவினா்களை பட்டியலிட்டபோது ‘சித்திக்கள்’ என தமிழ் வார்த்தையை குறிப்பிட்டார்.
இதனால் அமெரிக்க வாழ் இந்தியர்களும் தமிழர்களும் சித்தி எனும் தமிழ் வார்த்தைக்கு இணையத்தில் அர்த்தம் தேடி வருகின்றனர்.
No comments