அரசுப் பள்ளி தனியார் பள்ளிக்கு இணையான விளம்பரம் - வாட்ஸ் அப், பேஸ்புக்கில் பாடல் மூலம் விழிப்புணர்வு
✍️ | ராஜாமதிராஜ்.
கரூர் மாவட்டம் புலியூரை அடுத்து உள்ளது மணவாசி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கனிசமான அளவு மாணவர்கள் இருந்த போதிலும், இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அந்த கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தனியார் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களை கவரும் விதத்தில் அப்பள்ளி ஆசிரியர்கள் விளம்பரம் செய்ய முடிவு செய்தனர்.
காசு கொடுத்து படிக்க வேண்டாம், நம்ம அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைங்க என்ற பாடலுடன் துவங்கி, தாய்மொழிக் கல்வி, இணைய தள வசதியுடன் கூடிய கணினி வகுப்பு, காற்றோட்டமான வகுப்பறைகள், ஸ்மார்ட் போர்ட் வகுப்பறைகள், பராமரிக்கப்படும் கழிவறை வசதிகளுடன் செயல்படும் பள்ளி என்று வசதிகள் குறித்த வீடியோவுடன் ஓடக் கூடிய விளம்பரம் தயார் செய்யப்பட்டு சமூக வளை தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளை சேர்க்க சொல்லி முடிக்கின்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் இந்த விளம்பர யுக்தி பெற்றோர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
No comments