பரிசு பொருளை பாதுகாப்பாக நாம் எப்படி பொட்டலம் கட்டி அனுப்பினாலும் இது போன்ற கொரியர் காராங்க உடைத்துத்தான் கொடுப்பாங்க
✍ | - முகன். 👦
அன்பானவர்களுக்கு பரிசு பொருளை பாதுகாப்பாக நாம் எப்படி பொட்டலம் கட்டி அனுப்பினாலும் இது போன்ற கொரியர் காராங்க செயல்களினால் மக்கள் மத்தியில் கோபத்தை வரவழைத்துள்ளது.
இடம்: மதுரை தானப்பமுதலி தெரு.
நாம் நமது உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ, அல்லது, வெளி ஊர்களில், அல்லது வெளி நாடுகளில் உள்ளவர்களுக்கு மருந்து பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஏதேனும் முக்கியமான பொருட்களை கூரியர் செய்வது வழக்கம்.
மதுரையில் ஒரு தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் அலட்சியத்துடன் பொருட்களை கையாள்கின்றனர். ஒரு நபர் உயரமான மாடி படியில் இருந்து பொருட்களை கீழே உருட்டிவிடுகிறார். அது அவர்களின் பொறுப்பின்மையை காட்டுகிறது. செய்யும் தொழிலே தெய்வம் என கருதி ஒரு சில பொறுப்புள்ள ஊழியர்களின் மத்தியில் இவர்களை போன்றோர் விதி விளக்காகவும், கேளிக்கூத்தாகவும் இருக்கின்றனர்.
மதுரையில் உள்ள ஒரு தனியார் கூரியர் நிறுவன தொழிலாளர்கள் பார்சல்களை அலட்சிய போக்குடன் கையாளும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இதனை பார்ப்பவர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
No comments