தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மல்லிப்பட்டினத்தில் இரத்த தான முகாம்
✍ | ராஜாமதிராஜ் .
தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக மல்லிப்பட்டினம் கிளை மற்றும் தஞ்சை அரசு மருத்துவமனை(RMH) இணைந்து இரத்த தான முகாம் நடைபெற்றது.
இதில் 50 யூனிட் இரத்தம் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பகுதியில் ஒவ்வொரு பகுதியாக கொரோனோவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மற்றும் இரத்தம் இல்லாதவர்களுக்கு உதவுகின்ற வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆங்காங்கே இரத்ததான பணிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல் என பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த இரத்ததான முகாமிற்கு மாவட்ட தலைவர் கே. ராஜிக் முகமது தலைமை வகித்தார்.
மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார் இதில் மாவட்ட செயலாளர் வல்லம் ஜாபர், மாவட்ட துணை செயலாளர் பாவா மல்லிப்பட்டினம் கிளை நிர்வாகிகள் தலைவர் ஷேக் அப்துல்லாஹ், செயலாளர் ஜமால் மொய்தீன், பொருளாளர் கமால் மொய்தீன், துணை தலைவர் அப்துல்லாஹ், துணை செயலாளர் சையத் இப்ராஹிம் மற்றும் மாணவரணி லுஹா தொண்டரணி ரஹீம் ஹாரூன் அப்துல் மஜீத் முஹம்மத் இபாதுர் ரஹ்மான் ஜிஹானுதீன் ஜவாஹிர் ஷாஜஹான் ரத்வான் ஹாலித் நிஜாம் இஸ்மாயில் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியை மல்லிப்பட்டினம் கிளை மருத்துவரணி தமீம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். இதில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த இரத்ததான முகாமில் சிறப்பு அழைப்பாளராக CT சேதுபாவசத்திரம் காவல் ஆய்வாளர் V.R. அண்ணாதுரை (MA) அவர்கள் அழைக்கப்பட்டார். இதற்கு முன்பாக மதுக்கூர், அதிராம்பட்டினம் என பல்வேறு பகுதிகளில் இம்முகாம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
No comments