Header Ads

அரியலூர் மாவட்ட மக்கள் தொழில் தொடங்க கடன் மேளாவில் பங்கேற்ற்று பயன்பெறலாம்.


அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மக்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம் சுய தொழில் செய்வதற்கு தொழிற்கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தொழிற்கடன், தனி நபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு கடன் மற்றும் கறவை மாடு வாங்க கடனுதவி பெற விரும்புவார்கள் மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய கல்வியில் சிறந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் உயர் கல்வி பயில்வதற்கான கல்வி கடன் பெற விரும்புபவார்கள் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் 6-8-2020 அன்று காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள டாப்செட்கோ மற்றும் டாம்கோ லோன் மேளாவில் விண்ணப்பங்கள் பெற்று பயன்பெறலாம்.

கடன் பெற பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மகளாக இருத்தல் வேண்டும். வயது 18 முதல் 60க்குள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் கிராமப்புறமாயின் ரூ 81000 க்கு உட்பட்டும் நகர்புறமாயின் ரூ 1,03,000க்கு உட்பட்டும் இருக்க வேண்டும். மேலும் ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டும் கடனுதவி வழங்க படும். கடன் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், சாதி சான்றிதழ் , பள்ளி மாற்று சான்றிதழ் , வருமான சான்றிதழ் மற்றும் திட்ட தொழில் அறிக்கை ஆகியவை இணைக்க பட வேண்டும்.

மேலும், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் னால அலுவலகம், கூட்டுறவு சங்ககளின் மண்டலா இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வாங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பங்கள் பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. த. ரத்னா, இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள  லீடர் தமிழ் செய்தியின் முகநூல் (Facebook) பக்கத்தில் இணைத்திருங்கள்.

No comments

Powered by Blogger.