Header Ads

செப்டம்பர் மாத ரேசன் பொருட்களுக்கான டோக்கன் இன்று முதல் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். உணவுத்துறை அமைச்சர் காமராஜ்!

 ✍️ | ராஜாமதிராஜ்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள பாமணி கிராமத்தில் அம்மா வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடு கட்டும் பணிகளை தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேற்றைய தினம் திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் டெல்டா பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழில் தொடங்க ஆவணம் செய்திருப்பதாக அறிவித்ததற்கு டெல்டா பகுதி மக்களின் சார்பில் தனது நன்றியை முதல்வருக்கு தெரிவிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் உத்தரவின்படி இன்று மன்னார்குடி அருகே பாமணி கிராமத்தில் நடைபெற்ற வரும் அம்மா பசுமை வீடு கட்டும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்ததாகவும் தெரிவித்த அமைச்சர் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் உள்ள நிலையில் கூட்டணி குறித்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்திருவாரூர் மற்றும் தஞ்சையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக முதல்வர் பதில் அளித்ததாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

 தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது முக கவசத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்ற நோக்கில் எந்தக் கருத்தையும் கூறவில்லை என்றும் அரசின் நடைமுறைகளை பின்பற்றி கொரோனா உடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அமைச்சர் தனது கருத்தை தெரிவித்ததாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

 செப்டம்பர் மாத ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் இன்று முதல் 1ஆம் தேதி வரை வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கப்படும் என்றும் வெள்ளிக்கிழமைகளிலும் ரேஷன் கடைகள் செயல்படும் என அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.