தங்கம் என் நினைத்து பெண்ணிடம் கவரிங் செயினை பறிக்க முயன்று தர்ம அடி வாங்கிய இளைஞர்..
✍️ | ராஜாமதிராஜ்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குலமங்கலம் அடுத்துள்ள மணியஞ்சி பகுதியை சேர்ந்த விஜயா என்ற பெண் தனியாக சாலையில் நடந்து சென்றுள்ளார்.
இதை நோட்டமிட்ட வாலிபர் ஒருவர் டூவிலரில் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது திடீரென அந்த இளைஞர் விஜயா கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றார்
விஜயா இது கவரிங் செயின் விட்டு விடுங்கள் என்று கெஞ்சியவாறு அலறியுள்ளார்.
ஆனால் அதனை காதில் கேட்காத இளைஞர் வலுக்கட்டாயமாக செயினை பறித்துள்ளார். விஜயாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த
கிராம மக்கள் வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து இளைஞரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்
காவல்துறையினரின் விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டது மதுரை முல்லைநகரை சேர்ந்த பாலமுருகன் என்பது தெரிய வந்தது.
சாலையில் தனியாக நடந்து சென்ற பெண் அணிந்திருந்தது தங்க செயின் என நினைத்து கவரிங் செயினை பறிக்க முயன்ற போது பொது மக்களிடம் வசமாக சிக்கி கொண்டு தர்ம அடி வாங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாலமுருகனை கைது செய்த அலங்காநல்லூர் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments