Header Ads

பாலத்தை இறக்க முடியாததால் பல மணி நேரமாக நிலைகுலைந்த போக்குவரத்து

 

✍ |  -மகிழ்மதி.

லண்டன் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘டவர் பிரிட்ஜ்’ பாலம், ஒரு கப்பல் கடந்து செல்வதற்காக நேற்று முன்தினம் பிற்பகலில் உயர்த்தப்பட்டது. 

பின்னர் தொழில் நுட்பக் கோளாறு பாலத்தை இறக்க முடியாததால் பாதி உயர்த்தப்பட்ட நிலையிலேயே நின்றபடி காட்சியளித்தது. 1886-1894 ஆண்டுகளுக்கு இடையே கட்டப்பட்ட இந்தப் பாலம் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 800 முறை உயர்த்தப்படுகிறது. பாலம் மூடப்பட்டது குறித்து மாலை 5 மணியளவில் போலிஸ் அறிவித்தது. அதற்கு ஒரு மணி நேரம் கழித்து, நடையர்களுக்குப் பாலம் திறந்துவிடப்பட்டது. ஆனாலும், பல மணி நேரமாக பாலம் வாகனப் போக்குவரத்திற்கு மூடப்பட்டிருந்தது. இதனால் பாலத்தை ஒட்டிய பகுதிகளில் போக்குவரத்து நிலைகுலைந்தது.  

No comments

Powered by Blogger.