Header Ads

மீண்டு வாருங்கள் குரலிசையே.

 

✍ | - மகாலட்சுமி முத்துகுமரன்.

S. P. B - இசையுலகின் அழியா ஆனந்தம். 1966 முதல் இந்திய இசையை மையம் கொண்டுள்ள கரை கடக்காத குரலிசை புயல். பன்முக அடையாளம் கொண்டவர், அடைந்த விருதுகள் அவர் பெயர் சொல்லி பெருமை கொள்ளும்.

இவர் தமிழில் முதலில் பாடியது ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் ௭ம்.௭ஸ்.வி இசையில் எல். ஆர். ஈஸ்வரியோடு இணைந்து '' 'அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு' ௭ன்ற பாடல் . ௭திர்பாராத நிலையில் ஹோட்டல் ரம்பா திரைப்படம் வெளியிடப்படவில்லை.

அடுத்ததாக சாந்தி நிலையம் படத்தில் வரும் 'இயற்கையெனும் இளையகன்னி' என்ற பாடலைப் பாடினார் . ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில்' பாடிய ஆயிரம் நிலவே வா' பாடல் வெளிவந்தது. அங்கிருந்து ஆரம்பமானது இசை பயணம்.

நாற்பதாயிரம் பாடல்களை 16 மொழிகளில் பாடி கின்னஸ்  சாதனைகளை நிகழ்த்தி காற்றில் கலந்து சுவாசமாக நிறைந்துள்ளது ரசிகர்களின் மனதில்.

அவர் ஒரு பிரபலமானவர் மட்டுமல்ல, அவருக்கு ஒரு சிறந்த மறுபக்கமும் உள்ளது. சமூக சேவைக்கு என்று வரும்போது, நிதி திரட்டும் நிகழ்வுகளுக்கு அவர் எப்போதும் முன் நின்று உதவி இருக்கின்றார். அவரின் மறு வருகையை  மட்டுமே அவரின் ரசிகர்கள் எதிர் நோக்கி உள்ளனர். அகவை 74 அவரின் உடலுக்கு தான் குரலுக்கு என்றும் 16 மட்டுமே.

No comments

Powered by Blogger.