இயற்கை விவசாயத்தில் செவ்வந்தி பூ மகசூல்.... லாபம் காணும் விவசாயி....
✍ | ராஜாமதிராஜ் .
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா நாடாகுடி கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் தனது நிலத்தில் செண்டை பூ என்கின்ற செவ்வந்திப்பூவை பயிரிட்டு வருகிறார்.
இந்த செண்டை பூச்செடியை ஓசூரில் இருந்து வாங்கி வந்து இங்கே பயிரிட்டு ஓரளவு லாபம் அடைந்து இருக்கிறார். இந்த செண்டை பூ விவசாயத்திற்கு மருந்துகள் தற்போது கொரோனா காலத்தில் கிடைக்காததால் அதனை வேதாரண்யம் சென்று கிட்டத்தட்ட 80 கிலோமீட்டர் தூரம் சென்று வாங்கி வந்து மருந்தை தெளித்து வருகிறார். இந்த பூச்செடி 90 நாட்களில் லாபத்தைக் கொடுக்க கூடிய செண்டை பூ அவருக்கு ஓரளவு லாபம் தருகிறது என்கிறார்.
No comments