கொரோனோ வைரஸ் தொற்றால் உயிரிழந்த வியாபாரிகளுக்கு தமிழக அரசு ரூ10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் விக்கிரமராஜா கோரிக்கை...
✍️ | ராஜாமதிராஜ்.
திருத்தணியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அவர்கள் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார் அவருக்கு திருத்தணி நகர அனைத்து வணிகர் சங்கம் கூட்டமைப்பு மற்றும் வணிகர் சங்க பேரமைப்பு ஆகியோர்கள் இணைந்து மாநில தலைவர் விக்கிரமராஜா அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர் திருத்தணி அருகில் உள்ள மத்தூர் பகுதியில் அனைத்து வணிகர் சங்கம் தொடங்கி வைத்தார் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வணிகர்கள் உறுப்பினராக இணைந்துள்ளார்கள் மேலும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு பொருளாளர் முருகேசன் அவர்கள் கொரோனோ வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு உயிரிழந்தார் ஆர்.கே. பேட்டை பகுதியில் அவரது படத்தை திறந்து வைத்து எ.எம்.விக்கிரம ராஜா அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது.
திருத்தணி பகுதி வணிகர்களின் பாதுகாப்பான பகுதிகளாக செயல்பட வணிகர்களின் கூட்டமைப்பு பேருதவியாக செயல்பட்டு வருகிறது, மேலும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொருளாளர் முருகேசன் கொரோனோ வைரஸ் தொற்றி தாக்குதல் அடைந்து உயிரிழந்தார் அவரது படத்திறப்பு நின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 25- ஆண்டு காலம் வணிகர்களுக்கு ஆக பாடுபட்ட அவருக்கு புகழஞ்சலி செலுத்தி நிகழ்ச்சியில் பங்கு பெற்றேன்.
தற்போது மத்திய அரசு மற்றும் தமிழக அரசு ஊரடங்கு தளர்வு அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள் இதில் இந்த தளர்வு களில் மின்சார ரயில்கள் மற்றும் பொதுசேவை ரயில்கள் இயக்க வேண்டும் அப்படி இயக்கினால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் வியாபாரிகள் கூலித்தொழிலாளர்கள் ஆகியவர்களுக்கு பேருதவியாக இருக்கும் மத்திய மாநில அரசுகள் இதனை பரிசீலனை செய்து ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும்.
மேலும் தமிழக அரசு பேருந்துகள் தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்கு உள்ளே மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது இந்த பேருந்துகள் சேவை தமிழகம் முழுவதும் சென்று வர வேண்டும் அப்போதுதான் வியாபாரிகள் பொதுமக்கள் பயன் அடைவார்கள்.
மேலும் இந்த ஊரடங்கு நோய்த்தொற்று காலகட்டத்தில் வியாபாரிகளின் பங்கு மிகப்பெரிய பங்காகும் மத்திய மாநில அரசுகள் இதனை நன்கு உணர்வார்கள் காரணம் பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் நோய்தொற்று காலத்தில் பொது மக்களுடன் நேரடியாக வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பழம், பால் என அனைத்தையும் பொதுமக்களுக்கு சென்று சேர கொரோனோ வைரஸ் காலத்தில் சேவை ஆற்றினார்கள்.
இதில் பாதிப்படைந்து தமிழகம் முழுவதும் கொரோனோ வைரஸில் உயிரிழந்த வியாபாரிகள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 10 -லட்சம் நிவாரணம் தமிழக அரசு வழங்க வேண்டும்.
என்ற கோரிக்கையை நான் முன்வைக்கின்றேன் மேலும் வங்கிகளில் கடன் பெற்ற வியாபாரிகளுக்கு ஆறு மாதம் தவணை காலங்களை நீட்டிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை மத்திய அரசுக்கு நான் முன்வைக்கின்றேன் கடிதம் வாயிலாக மத்திய அரசுக்கு இந்தக் கோரிக்கையை அனுப்பி உள்ளேன் என்று பேசினார் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர். கனகராஜ், மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் கோவிந்தராஜ், திருத்தணி பகுதி செயலாளர்- எல். சுதாகர், பொருளாளர்-டி. சக்கரவர்த்தி நகைக்கடைகள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் -கமல்குமார் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்...
No comments