மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 100வது நினைவு தினம். மேல நாகை கிராமத்தில் மாணவர்களும் பொதுமக்களும் பாரதியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை
✍️ | ராஜாமதிராஜ்.
விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், சமூக சீர்திருத்தவாதி, என பல பெயர்களைக் கொண்ட சுப்பையா என்ற சுப்ரமணிய பாரதியார் சின்னச்சாமி லட்சுமி அம்மையார் தம்பதியருக்கு கடந்த 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி எட்டையபுரத்தில் பிறந்தார். இந்திய சுதந்திர போராட்டத்தில் பாரதியின் பங்கு மிகப்பெரியது.
அந்தவகையில் கவிதைகள் ,பாடல்கள், நூல்கள் ,பத்திரிகைகள், வாயிலாக இந்திய மக்களுக்கும் தமிழர்களுக்கும் சுதந்திர உணர்வை ஊட்டி இந்தியா சுதந்திரம் அடைய அரும்பாடுபட்ட பாரதியார் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி தனது 38ஆவது வயதில் மறைந்தார்.
பாரதியின் மனைவி செல்லம்மாள் அவரது இரண்டு மகள்கள் தங்கம்மாள் சகுந்தலா என்பவர்கள் அவர். இன்று பாரதியாரின் 100 வது நினைவு தினத்தையொட்டி மன்னார்குடி அருகே மேலநாகை கிராமத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பொதுமக்களும் மாணவ மாணவிகளும் பொதுநல அமைப்புகள் சேர்ந்து வரும் மலர் தூவியும் அவரது பாடல்களைப் பாடியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மன்னார்குடி அருகே உள்ள மேலநாகை கிராமத்தில்தான் பாரதியார் தலைமறைவு வாழ்க்கை நடத்தியதாகவும் அவரது பிரதான அடையாளங்களான மீசையை எடுத்து விட்டு முண்டாசு இல்லாமல் இப்பகுதியில் தலைமறைவாக வாழ்ந்ததாகவும் - நல்ல நாடு பாரத நாடு என்ற பாடலை இந்த கிராமத்தில் இருந்து எழுதியதாகவும் கூறப்படுகிறது.
பாஞ்சாலி சபதம் பாப்பா பாட்டு கண்ணன் பாட்டு குயில் பாட்டு என பல்வேறு நூல்களை மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் உலகிற்கு வந்து சென்றுள்ளார்.
No comments