ஜி.எஸ்.டி வரியில் ரூ.107 கோடி மோசடி
சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் ஜி.எஸ்.டி வரியில் ரூ.107 கோடி மோசடி ஒருவர் கைது!
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் 107 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, ஜி.எஸ்.டி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஒருவரை கைது செய்துள்ளனர்.
இல்லாத முகவரியில் போலி நிறுவனங்களை உருவாக்கி பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்தததை போன்று, 740 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி ரசீதுகளை தயாரித்ததாக, கொடுங்கையூரைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலமுறை விசாரணைக்கு அழைத்தும் ஆஜாராகத நிலையில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஜி.எஸ்.டி புலனாய்வு பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments