குழந்தையை பத்திரமாக மீட்ட காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
ராயபுரத்தில் கடத்தி செல்லப்பட்ட வட மாநிலத்தை சேர்ந்த குழந்தையை பத்திரமாக மீட்ட காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, இராயபுரம் சரக உதவி ஆணையாளர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட காவல் தனிப்படையினர், சென்னை ராயபுரத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 2½ வயது குழந்தை கடத்தப்பட்ட வழக்கில், 60க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளின் உதவியுடனும் மற்றும் குற்றவாளியின் உறவினர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலும், நாவலூரில் குற்றவாளியை கைது செய்து, குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சிறப்பாக பணிபுரிந்து கடத்தப்பட்ட குழந்தையை பத்திரமாக மீட்ட காவல் குழுவினரை மற்றும் உதவிய பொதுமக்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப,, அவர்கள் நேற்று 17.9.2020 நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
No comments