ஸ்ரீ மோடி ஜெயந்தி விழா 10நாட்கள் கொண்டாடப்படும் புதுக்கோட்டை பாஜக....
✍️ | ராஜாமதிராஜ்.
பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை பாஜக சார்பில் ஸ்ரீ மோடி ஜெயந்தி விழா பத்து நாட்களுக்கு நடைபெற இருக்கிறது.
மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சுவர் விளம்பரங்கள் போஸ்டர்களால் கலைகட்டியது புதுக்கோட்டை நகரம்.
தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் டாக்டர் RJ ஆனந்த் அவர்களின் ஏற்பாட்டில் புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சி சார்பில் 10 நாட்களுக்கு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மோடி ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது நாளை பதினொன்றாம் தேதி முதல் 20ம் தேதி வரை நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீ மோடி ஜெயந்தி என்ற நிகழ்ச்சி நாளை முதல் துவங்குகிறது.
இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை நகரில் உள்ள அனைத்து வரத்து வாய்க்கால்களை தூர்வாருதல் மத்திய அரசின் திட்டமான செல்வமகள் திட்டத்தில் பெண் குழந்தைகளை இணைத்தல் ஆயுஷ்மான் பாரத் பிரதமர் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்குதல் மரக்கன்று நடுதல் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை அமைத்து தருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது.
புதுக்கோட்டையில் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாளுக்காக பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் சுவரில் விளம்பரங்கள் போஸ்டர்கள் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டு மோடி அவர்களின் பிறந்தநாள் தற்போதைய களைகட்ட தொடங்கியுள்ளது.
இது குறித்து மாவட்ட துணைத்தலைவர் ஏவிசிசி கணேசன் கூறுகையில் காந்தி ஜெயந்தி கிருஷ்ண ஜெயந்தி போன்ற இந்து பண்டிகைகள் போல் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீ மோடி ஜெயந்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது இந்த விழாவில் 10 நாட்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் பத்து நாட்களுக்கு 700 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட நகர நிர்வாகிகளும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
No comments