Header Ads

பனை விதை நடும் விழா 12கிலோமீட்டர் தூரம்; நீடாமங்கலத்தில் 22-ந் தேதி நடைபெறுகிறது.

✍️ | ராஜாமதிராஜ்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை தலைமை இடமாகக்கொண்டு செயல்படும் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு சுற்றுச்சூழல் மேம்பாட்டுச்சேவைகளைச்செய்து வருகிறது. மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பனை விதைகளை விதைப்பு செய்தலை பிரதான சேவையாக செய்து வரும் இந்த அமைப்பின் சேவைகளில் பொதுமக்களும் பங்கேற்று வருவது சிறப்பாக கருதப்படுகிறது. இந்தாண்டுக்கான பனை திருவிழா வரும் செப்டம்பர் 22 ந் தேதி நீடாமங்கலம் தொடங்கி வாழாச்சேரி முடிய 12 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையின் இருபுறங்களிலும் பனை விதைகள் விதைக்கப்படவுள்ளது. இச்சேவையில் அதங்குடி, அனுமந்தபுரம், ரிஷியூர், பெரம்பூர் உள்ளிட்ட ஊராட்சிகளைச்சேர்ந்த 100 நாள் வேலைத்திட்டப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் என 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இது குறித்து கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு கூறுகையில், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் பனை விதைகள் விதைப்பதை வழக்கமாகக்கொண்டுள்ளது. வரும் செப்டம்பர் 22 ந் தேதி நீடாமங்கலம் தொடங்கி கொத்தமங்கலம், முல்லைவாசல், பெரம்பூர், கட்டையடி, நன்மங்கலம் சாலை, ரிஷியூர், பச்சைக்குளம், வாழாச்சேரி வரை 12 கிலோ மீட்டர் தொலைவிற்கு பனை விதைகளை விதைக்கவுள்ளோம். இச்சேவையில் 4 ஊராட்சிகளைச்சேர்ந்த 100 நாள் திட்டத்தொழிலாளர்கள், தன்னார்வதொண்டர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என  500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.

அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்படவுள்ளது. சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க ஏதுவாக விழாவில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் 4 அடி நீளமுள்ள நொச்சி குச்சி ஒன்று வழங்குகிறோம். இந்த குச்சி மற்றவர் மீது படாத தூரத்தில் அமர்ந்து இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். விழா முடிந் வீட்டிற்கு சென்று அந்த நொச்சி கிளையை பதியமிவும் கேட்டுக்கொண்டுள்ளோம். இந்த முயற்ச்சியால் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும் என நம்புகிறோம். பத்தாயிரம் பனை விதைகளை விதைக்க இலக்கு நிர்ணயித்தோம், தற்போது தமிழ்நாடு, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளிலிருந்தும் பனை விதைகளை அனுப்பி வருகின்றனர்.

25000 பனை விதைகள் இதுவரை எங்கள் அமைப்பை வந்தடைந்துள்ளது. ஆகவே இன்னும் ஒரு 18 கிலோ மீட்டர் தூரம் நடவும் முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகிறோம். விழாவில் வேளாண்மைத்துறை உயர் அதிகாரிகள், வன அலுவலர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் , ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழிகள் போடப்படுகிறது, விழா அன்று பனை விதைகளை பதியமிட்டு மண் கொண்டு  மூடியதும் டேங்கர் லாரிமூலம் தண்ணீர் ஊற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

No comments

Powered by Blogger.