Header Ads

ரூ. 2000 நீங்கள் இன்னும் பெறவில்லையா? பிரதமரின் கிசான் திட்டத்திலிருந்து; உங்கள் கணக்கு விவரங்களை புதுப்பிப்பது, திருத்துவது எப்படி? 


✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்ட பயனாளிகளுக்கு பிரதமர் மோடி அண்மையில் ரூ.17,000 கோடியை விடுவித்து உத்தரவிட்டார். இதன் மூலம் சுமார் 8.5 கோடி விவசாயிகள் தங்களின் 6வது தவணையாக ரூ.2000 வீதம் அவரவர்களின் வங்கி கணக்கில் பெற்றனர். பெரும்பாலான விவசாயிகளுக்கு மத்திய அரசின் இந்த தவணை கிடைக்கப்பெற்றுள்ளது. இருப்பினும் இன்னும் சிலர் தவணைக்காக காத்திருக்கின்றனர். 

விவசாயிகள் தங்களின் வங்கி கணக்கிற்கு மத்திய அரசின் தவணை கிடைக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களின் ஆவணங்களில் ஏதேனும் பிழை காரணமாக உங்களுக்கு தவணை கிடைக்கமால் போய் இருக்கலாம். உதாரணமாக உங்கள் ஆதார் எண்ணில் பிழை இருக்கலாம் அல்லது உங்கள் வங்கி கணக்கு பெயர், உங்களின் தொலைபேசி எண்ணில் பிழை இருக்கலாம். இதனை பி.எம் கிசானின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று உடனே சரி சரிசெய்துக் கொள்ளவேண்டும்.

ஆதார் விவரங்களை புதுப்பிப்பது எப்படி?

உங்கள் ஆதார் எண்ணில் பிழை இருந்தால் கிழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி புதுப்பித்து கொள்ள முடியும். முதலில் www.pmkisan.gov.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.

வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள "Farmers Corner-ல் Edit Aadhaar Details என்பதை கிளிக் செய்யுங்கள். பின் உங்களின் ஆதார் எண் அல்லது பெயர் அங்கு கொடுக்கப்பட்ட இடத்தில் எழுதிய captcha code-யை உள்ளிடவும்.

பின் உங்களின் ஆதார் தொடர்பான விவரங்களை திருத்த முடியும்.உங்கள் கணக்கு நிலை அறிய என்ன செய்ய வேண்டும்?

பி.எம் கிசானின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உங்களின் தவணை தொடர்பான விவரங்களை அறிந்துகொள்ள முடியும். இதற்குக் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். உங்களின் கணக்கு நிலை குறித்து அறிய முதலில் www.pmkisan.gov.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள். முகபபுப்பக்கத்தில் "Farmers Corner"-ல் ''Beneficiary status" என்பதைக் கிளிக் செய்க.

பின் உங்களின் ஆதார் எண் / கணக்கு எண் / மொபைல் எண் ஆகிய மூன்று விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை உள்ளிடவும், பிறகு "Get Date" என்பதை கிளிக் செய்க. இப்போது உங்களின் கணக்கு நிலவரங்களை பார்க்கமுடியும்.

உங்கள் கணக்கு விவரம் தொடர்பான ஏதேனும் விவரங்களுக்கு உங்கள் பகுதியில் உள்ள வேளாண் துறை அதிகாரிகளையும் தொடர்புக் கொண்டு விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.

No comments

Powered by Blogger.