Header Ads

மகரூர் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை,மற்றும் ரூ 1லட்சம் கொள்ளை.


✍️ | ராஜாமதிராஜ்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் அருகே உள்ள மகரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 82 வயதான குமாரசாமி.

இவரும் இவரது மனைவி சிவபாக்கியமும் தனியாக வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குமாரசாமியின் வீட்டின் அருகிலேயே அவரது இரண்டு மகன்களும் வசித்து வருகின்றனர் இந்நிலையில் நேற்று இரவு தனது மகன் வீட்டில் குமரேசன் மற்றும் சிவபாக்கியம் இருவரும் தங்கியுள்ளனர்.

இதனை எப்படியோ அறிந்த மர்ம கும்பல் குமாரசாமியின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 13 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர் இது குறித்து அறிந்த குமாரசாமி உடனடியாக வரஞ்சரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.தகவலறிந்து உடன் விரைந்து வந்த வரஞ்சரம் காவல்துறையினர் திருட்டுச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.