விளையாட்டு விபரீதமானது... மொட்டை மாடியில் பறந்த பலூனை பிடிக்க முயன்ற குழந்தை கீழே விழுந்து உயிரிழப்பு:
✍️ | ராஜாமதிராஜ்.
திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் போவாஸ். இவருடைய 4 வயது மகள் ஜோஷல் டைசன், இவர் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். நேற்று மாலை தனது பெற்றோருடன் உறவினர் ஒருவரது வீட்டு விசேஷத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது குழந்தைகள் மொட்டை மாடியில் பலூன்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பலூன் ஒன்று பறந்து சென்றுள்ளது. அந்த பலூனை சிறுமி ஜோஷல் பிடிக்க முயன்றபோது, மாடியில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுடன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
பலூனை பிடிக்கச் சென்ற குழந்தை மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments