கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 149-வது பிறந்தநாள் விழா
✍️ | ராஜாமதிராஜ்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 149-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருவாரூர், புலிவலம் பகுதியில் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களுடைய திருவுருவச்சிலையை கே.வி.ஆனந்த் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என மக்களால் போற்றப்பட்ட இந்திய சுதந்திர போராட்டத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் வ.உ.சிதம்பரனார். அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு செக்கு இழுத்தார்.
இன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 149 -வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு இன்று திறக்க பட்ட திருவுருவ சிலைக்கு பல்வேறு தரப்பினர் மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பாஜக மாவட்டத் தலைவர் ராகவன் பேசும்போது வ.உ.சி அவர்களின் புகழ் பொதுமக்கள் மத்தியில் எளிதாக சென்றடைய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். இந்த நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர் கோவி.சந்துரு, மாவட்ட பொதுச்செயலாளர், ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், மற்றும் காங்கிரஸ் கட்சி, வா.உ.சி பேரவை அமைப்பினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
No comments