Header Ads

நண்பர் ஒருவரின் விழிப்புணர்வு பதிவு!!!

✍️ | மகிழ்மதி.

எனது தங்கை சாலைவிபத்தில் உயிரிழந்து ஒருவருடம் ஆகிவிட்டது...

அந்த விபத்து சம்மந்தப்பட்ட வழக்குகள், மற்றும் காப்பீடுகள் சம்மந்தப்பட்ட விசயங்களை நான்தான் Follow செய்து கொண்டு இருக்கிறேன். முதலில் வாரிசு சான்றிதழ் வாங்க திருப்பூருக்கும் பல்லடத்திற்க்கும் நான் அலைந்த அலைச்சல் சொல்லிமாளாது..

ஒருவழியாக வாரிசு சான்றிதழை வாங்கி சம்மந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்க்கும். வழக்கு நடத்தும் வக்கீலிடமும் கொடுத்துவிட்டேன். அப்படியே முதலமைச்சர் நிவாரணநிதிக்கும் விண்ணப்பிதாகிவிட்டது...

இதற்க்கு முன்பாக ,

என் தங்கை இறந்த ஒருமாதம் கழித்து,

அவள் வங்கிகணக்கு வைத்திருக்கும்  கனராவங்கி சென்று மாதம் ஒருரூபாய் பிடித்தம் செய்யும் மத்திய அரசின் பிரதமமந்திரி விபத்துகாப்பீட்டில் இணைந்து இருக்கிறதா? என்று வங்கி மேலாளரை சந்தித்து கேட்டேன்.

அந்த தொகையை பிடித்தம் செய்யவில்லை. அதனால் அந்த ஸ்கீம் உங்கள் தங்கையின் வங்கிக்கணக்கில் இல்லை கூறி முடித்துக்கொண்டார். கஷ்ட்டப்படும் தங்கை குடும்பத்திற்க்கு என்னால் பணம் காசு கொடுத்து உதவமுடியாட்டாலும், இதுபோன்ற விசயங்களை நான் விடாமல் அழைந்து திரிந்து என்னால் முடிந்த வேலையை செய்துவந்தேன்.

இந்த சூழ்நிலையில் தங்கை இறந்து நான்கைந்து மாதங்கள் கழித்து வாட்சாப்பில் ஒரு மெசஜை பார்த்தேன்.

அது சாலைவிபத்தில் பாதிக்கப்பட்டு காயமடைந்தாலோ, உயிரிழந்தாலோ, வங்கி  ATM CARD வைத்துஇருந்தால் காப்பீட்டுத்தொகை கிடைக்கும் என்று இருந்தது. இந்த விசயம் நான் கேள்விப்படாத ஏன் இன்னும் அநேகர் கேள்விப்படாத விசயம்.

உடனே அருகில் இருக்கும் கனராவங்கிகிளைக்கு சென்று இந்தவிபரம் குறித்து வங்கி மேளாளரிடம் கேட்க, ஆம் அப்படிப்பட்ட ஒரு காப்பீடு இருக்கிறது என்று கூறினார்.

நானும் சரியென்று என்தங்கை வங்கிகணக்கு வைத்திருக்கும் கனராவங்கி கிளைக்கு சென்று அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் விசாரிக்க,

அவர் ஆம் 

ATM கார்டு வைத்திருக்கும் நபருக்கு காப்பீடு உண்டு என்று என் தங்கையின் வங்கிவிபரங்களை வாங்கி சரிபார்த்துவிட்டு, நீங்கள் இந்த காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறி அதற்க்குறிய ஆவணங்களையும் விண்ணப்பங்களையும் கொடுக்க சொன்னார்கள்.

நான் என்தங்கையின் கணவர் அவரால் வரஇயலாத சூழ்நிலையிலும் அவரை வரச்சொல்லி விண்ணப்பத்தை கொடுத்த்தோம்.

பின்னர் கிளை மேலாளரையும் நேரில்பார்த்து கஷ்ட்டப்படும் குடும்பம் சார். திருமணவயதில் பெண்இருக்கிறாள் இந்த காப்பீட்டுத்தொகை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று காப்பீடு கிடைக்க உங்கள் தரப்பில் இருந்து செய்யவேண்டிய விசயங்களை செய்யுங்கள் சார்னு சொல்லிவிட்டு

அவருடைய போன்நம்பரையும் வாங்கி கொண்டேன். அவ்வப்போது போன்செய்து என்ன ஆச்சு? விண்ணப்பம் என்று கேட்டுக்கொண்டு இருப்பேன்.

அவரும் நான் பார்த்து சொல்கிறேன், பார்த்து சொல்கிறேன் என்று சொல்லிச்சொல்லி காலம் கடந்தது.

இதற்க்கிடையில் கொரோனா பிரச்சனையை காரணமாக சொல்லிக்கொண்டு இருந்தார்.

பின்னர் நேரில் இரண்டுமுறை சென்று விபரம் கேட்க அது கிணற்றில் போட்ட கல்லாக கிடந்தது.

இதற்க்கிடையே கடந்த வாரம் போன்செய்து கேட்க்கும்போது உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்து 90 நாட்களுக்குள் விண்ணப்பித்து இருக்கவேண்டும் என்று நியு இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து மெயில் வந்துள்ளது என்று கூறினார்.

மீண்டுமாக, அவரிடம் சார் நான் என்தங்கை இறந்து ஒருமாதம் இருக்கும்போது பிரதமமந்திரி காப்பீடு பற்றி நான் விசாரிக்க வரும்போதே இந்த ATM காப்பீடு பற்றி கூறியிருந்தால் நான் அப்போதே விண்ணப்பித்து இருப்பேன். 

ஏன் வங்கியின் மேளாளராக இருக்கும் உங்களுக்கு என்தங்கை விபத்தில் இறந்துவிட்டார் என்று விபரம் என்னிடம் கூறி காப்பீடு பற்றியும் விசாரிக்கும்போது, அந்த காப்பீடு இல்லைங்க. பரவாயில்லை ATM காப்பீடு இருக்குனு அதை விண்ணப்பியுங்கள் என்று சொல்லியிருக்கலாமே.?

ஏன் உங்களுக்கு ATM காப்பீடு பற்றி தெரியாதா? அப்படினு கேட்க ,

அவர் மழுப்பலாக பேசி இல்லைங்க சார் 90 நாட்களுக்குள் விண்ணப்பித்து இருக்கனும் நீங்கனு பழைய பல்லவியை படித்தார். 

நானும் விடாமல் வங்கி வாடிக்கையாளருக்கு  இதுபோன்று பயன்தரும் விசயங்கள் பற்றி எந்த வங்கியிலும் கூறுவதில்லை,

நீங்களும் அப்படித்தான் இருக்கிறீர்கள். கஷ்ட்டப்படும் சூழ்நிலையில் உள்ள தங்கை மகளுக்கு  அவளுடைய திருமணகாரியங்களுக்கு இந்த தொகை பயன்படும்னுதான் நான் இவ்வளவு பிரயாசைபட்டேன். அதுவும் இப்போ இல்லைனு ஆகிடுச்சு சரிங்க சார்  ரொம்ப நன்றினு சொல்லிட்டு போனை வைத்தேன்.

இப்போது ஒருசில விசயங்களை நான் இங்கே முன்வைக்கிறேன்.

1)வங்கிகளில் பிரதமமந்திரி காப்பீடு திட்டம், ஏடிஎம் கார்டு வைத்திருக்கும் வங்கி வாடிக்கையாளருக்கான காப்பீடு திட்டம் பற்றி அறிந்தவர்கள் எத்தனைபேர்???

2)இந்த காப்பீடுகள் பற்றி எந்த வங்கிகளாவது வெளியரங்கமாக வாடிக்கையாளர்களிடம் பேசி அதில் 

இணைய வற்ப்புறுத்தியிருக்கிறார்களா??*

(எனக்கு நான்கு வங்கிக்கணக்கு இருக்கிறது எந்த வங்கியோ அதன் ஊழியர்களோ இதுபோன்ற விசயத்தை கூறியது இல்லை)

3)மக்கள் பெரும்பாலும் அறியாத இந்த விசயங்களை பற்றி வங்கிகள் அக்கறை காட்டாமல் இருப்பது ஏன்??

அப்படியே அறிந்து விண்ணப்பித்தாலும் ,

அந்த வங்கியுடன் டையப் வைத்துள்ள காப்பீட்டுநிறுவனங்கள். அந்த விண்ணப்பங்களை பெரும்பாலும் ஏதோ ஒரு காரணத்தை சுட்டிக்காட்டி நிராகரிப்பதிலேயே குறியாய் இருப்பது ஏன்.???

4)ஒரு மரணம் நிகழ்ந்த குடும்பத்தில் அதுவும் விபத்தில் மரணம்அடைந்தவர்களின் குடும்பத்தில் உள்ள நெருங்கிய உறவுகள் அந்த துன்பநிகழ்வில் இருந்து மீண்டு வர எவ்வளவு நாட்கள் ஆகும், என்ற உளவியல் ரீதியான ஒரு விசயத்தைக்கூட நினைத்துப்பார்க்காமல் 90 நாட்களில் விண்ணப்பிக்க சொல்வது என்னமாதிரியான நடைமுறை.

( என் தங்கை  விசயத்தில் வாரிசு சான்றிதழ், பிரேதபரிசோதனை அறிக்கை கிடைக்கவே நான்கு மாதத்திற்க்குமேல் ஆகிவிட்டது) 

5)கார் லோன்மேளா, வீட்டுக்கடன் லோன்மேளா, ஒருபவுனுக்கு அதிகபணம்,குறைந்த வட்டி என்று விளம்பர பதாகைகளை வங்கிக்கு உள்ளேயும் வெளியேயும் வைத்து விளம்பரபடுத்தும் வங்கிகள்.

இதுபோன்ற காப்பீடுகள் பற்றிய விபரங்களை விளம்பரப்படுத்திவைக்க முன்வருவதில்லை. 

அதேவேளையில் வங்கி வாடிக்கையாளர்களிடம் இதுபற்றி விழிப்புணர்வு செய்யவோ காப்பீடுதிட்டத்தில் இணையவோ சொல்வது இல்லையே என்பதுதான் வேதனையான விசயம். 

ஏதோ இந்த காப்பீடுபணம் கிடைத்தால் அடமானம்  வைத்த நகையை திருப்பி தங்கைமகளின் திருமணகாரியத்திற்க்கு உதவியாக இருக்கும் என்று நினைத்த காரியத்திலும் மண்விழுந்த கதையாக போய்விட்டது.

இதற்க்கு முழுமுதல் காரணகர்த்தா யாரென்றால் நான்சொல்வேன் என்தங்கை இறந்த ஒருமாதத்தில் வங்கிக்கு சென்று பிரதமமந்திரிகாப்பீடு பற்றி  நான் விசாரித்தபோது,

அந்த திட்டத்தில் உங்கள் தங்கையின் வங்கிகணக்குயில்லை, விபத்தில் இறந்த உங்கள் தங்கையின் ஏடிஎம் கார்டுக்கு காப்பீடு இருக்கிறது. என்று என்னிடம் சொல்லாமல் மறைத்த அந்த வங்கி மேளாலர்தான் என்று பட்டவர்த்தனமாக சொல்லுவேன்.

இந்த பதிவை பார்க்கும்  வங்கித்துறையில் உள்ளவர்கள் இனிமேலாவது, ஒரு சம்பரதாயத்துக்காகவாவது இந்த காப்பீடு பற்றிய விசயங்களை ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சொல்லுங்கள். இல்லையென்றால் இந்த காப்பீடுகள் குறித்த விளம்பரபதாகைகளை அதிலும் குறிப்பாய் ATM கார்டு காப்பீடுபற்றி விளம்பரப்படுத்துங்கள்.

அது கஷ்ட்டப்படும் ஏழைக்குடும்பத்திற்க்கு ஆறுதல் அளிக்கும் நல்ல விளம்பர சேவையாய் இருக்கும் என்றும் வருத்ததுடன் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.