Header Ads

19 செப்டம்பர், சனிக்கிழமை காலை முக்கிய செய்திகள்



* பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக 12 அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியில் 2017 முதல் 2020 வரை பணியாற்றிய 12 அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்ட 12 பேரில் 5 பேர் ஏற்கனவே பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

* சென்னை பல்லாவரத்தில் ஓடும் ஷேர் ஆட்டோவில் ஆசிரியையிடம் நகை பறித்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுளள்னர். ஷேர் ஆட்டோவில் ஆசிரியை சரஸ்வதியிடம் நகையை பறித்து கீழே தள்ளிவிட்ட இருவரை பொதுமக்கள் மடக்கிப்படித்தனர். நகைபறிப்பில் ஈடுபட்ட பிரசாந்த், ரோஸ்மேரி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி: தட்டார்மடம் காவல் ஆய்வாளரை கைது செய்யக்கோரி திசையன்விளை காவல் நிலையம் முன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சொக்கன்குடியிருப்பில் கொலை செய்யப்பட்ட செல்வன் என்பவரின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செல்வன் உடற்கூறாய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் செல்வன் குடும்பத்துக்கு நிவாரணம், அரசு வேண்டும் என்றும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்டதை அடுத்து காவல்நிலையம் முன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புகார் அளித்து 4 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று போலீஸ் மீது குற்றம்சாட்டி முன்வைக்கப்பட்டுள்ளது. புதுப்பட்டி காவல் நிலையம் முன்பு மாணவியின் தாய் மண்ணெணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்: திண்டிவனம் அருகே போலி மதுபான ஆலை நடத்திய வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கேணிப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை, வீரப்பன், அன்பு, நாராயணன், ஆனந்தபாபு ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

* தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி மேலையூர் விவசாயி அறிவழகனுக்கு பார்சலில் வந்த பைப் வெடிகுண்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயி அறிவழகனுக்கு பார்சலில் வந்த பைப் வெடிகுண்டினை அனுப்பியது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை: செங்கத்தில் காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. குடும்ப பிரச்சனை காரணமாக விசாரணைக்கு சென்ற தன்னை எஸ்.ஐ. அவதூறாக பேசியதாக அப்பெண் புகார் அளித்துள்ளார்.

* சென்னை அமைந்தகரையில் நேற்று பெரியார் படத்துக்கு மலர்தூவி பிறந்தநாள் கொண்டாடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திராவிடர் கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் தளபதி பாண்டியன் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

* ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதி, கொண்டையம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள மேல்நீர்தேக்க தொட்டியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்.

* சென்னை: வேளச்சேரி பகுதியில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக  வாட்ஸ்அப் குழு மூலம்  விற்பனை செய்து வந்த நபரை கைது செய்தனர் தனிப்படை காவல் ஆய்வாளர் ராமச்சுந்தரம் குழுவினர்.


* தேனி மாவட்ட காவல்துறை மற்றும் தீயணைப்பு  மீட்பு படையினர்  இணைந்து முல்லைப் பெரியாறு, வைகை அணை ஆற்று பகுதிகளில் மழைக்கால தற்காப்பு பயிற்சியில் ஈடுபட்டனர்.

* கோயம்புத்தூரில்   உள்ள கோவிட் நோயாளிகளுக்கு இடையே தாமதமாக சோதனை முடிவுகள் மற்றும் மருத்துவமனைகளின் அதிகப்படியான சிகிச்சை செலவுகள் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக புகார்.

* சென்னை அரசு ஆர் எஸ் ஆர் எம் மகப்பேறு மருத்துவமனையில் பேஷண்ட்டுக்கு உணவு கொண்டு வந்தவர் நேரம் கடந்து வந்ததால் செக்யூரிட்டி உணவை கொடுங்கள் பேசிய இடம் நான் கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த நபர் பெண் செக்யூரிட்டியை தாக்கியுள்ளார். அதனால் மருத்துவமனையில் பரபரப்பு. ஓபி காவல்நிலையத்தில் போலீசார் இல்லாததால் மருத்துவர்கள் ராயபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

* வேலூர் மாவட்ட SP திரு.செல்வகுமார் அவர்களின் உத்தரவின்படி குடியாத்தம் மதுவிலக்கு ஆய்வாளர் திருமதி.லட்சுமி அவர்கள் தலைமையிலான  தனிப்படையினர் பேர்ணாம்பட்டு காவல் நிலைய குண்டலபள்ளி கிராம மலையடிவாரத்தில் நடத்திய மதுவிலக்கு வேட்டையில் 30 லிட்டர் கள்ளச்சாராயம்  கைப்பற்றப்பட்டது.

* இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்களில் மாற்றுத்திறனாளிகள் பணம் கட்ட தேவையில்லை என்பதற்கான மத்திய அரசாணை.

* நள்ளிரவில் சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்தது. சென்னை புரசைவாக்கம், கொரட்டூர், பாடி, உள்ளிட்ட பகுதிகளில் கனமழை.

* ஆதரவு அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் நடந்த இந்த ஆலோசனையில், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.

No comments

Powered by Blogger.