புத்திசாலித்தனமான நடவடிக்கையால் பாலியல் தொந்தரவு கொடுத்த ஐடி ஊழியரை போலீஸிடம் மாட்டிவிட்ட பெண்
* தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஐடி ஊழியரை புத்திசாலித்தனமான நடவடிக்கையால் பெண் ஒருவர் சிறையில் தள்ளி இருக்கிறார்.
சென்னை, போரூர் அடுத்த முகலிவாக்கம் சேர்ந்த பெண் ஒருவரை நடைப்பயிற்சியின் போது இரு சக்கரத்தில் பின்தொடர்ந்த இளைஞர் பாலியல் தொந்தரவு கொடுத்து இருக்கிறார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது செய்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தானே களத்தில் இறங்கிய அந்த பெண் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்த அந்த இளைஞரின் முக மூடியை சமூக வலைத்தளத்தில் தோலுரித்துக் காட்டினார். அத்துடன் பாலியல் தொந்தரவு செய்த வரை கண்டுபிடித்து விட்டேன். அடுத்து என்ன செய்வது? என கேள்வி எழுப்பிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இவரின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்த உடனடியாக அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு விசாரித்த போலீசார் அதிரடியில் இறங்கினர். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த மதுராந்தகதை சேர்ந்த ஆடம் அலியை கைது செய்திருக்கிறார்கள். இவர் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
* படப்பை அருகே 2 கோவில்களில் திருட்டு:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்கலம் ஊராட்சியில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று காலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதேபோல் படப்பை வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் முத்துமாரியம்மன் கோவிலிலும் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை திருடப்பட்டிருந்தது. இந்த இரு சம்பவங்கள் குறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
* சிறுமிக்கு பாலியல் தொல்லை- பெயிண்டர் கைது:
காஞ்சிபுரம் ஓரிக்கை மிலிட்டரி ரோட்டில் வசிப்பவர் அரிகிருஷ்ணன் (வயது 31). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர் காஞ்சிபுரம் தும்பவனம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இது குறித்து சிறுமியின் தந்தை காஞ்சிபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மைனர்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அரிகிருஷ்ணனை கைது செய்தனர்.
* கல்லூரி மாணவியை ஆபாசமாக படம்பிடித்த காமுக டிக்கெட் பரிசோதகர்.. அரக்கோணத்தில் கொடூரம்.!
சென்னையில் உள்ள கொளத்தூர் பகுதியை சேர்ந்த 22 வயது பெண்மணி, கோவையில் இருக்கும் கல்லூரியில் முதுகலைப் படிப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு நேரத்தில், கோவையிலிருந்து சேரன் அதிவிரைவு இரயில் மூலமாக சென்னை வந்து கொண்டிருந்துள்ளார்.
நேற்று அதிகாலை நேரத்தில் இரயில் அரக்கோணம் இரயில் நிலையத்திற்கு அருகே வந்தபோது, மாணவி கழிவறைக்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில், கழிவறையின் வெளியே நின்ற பயணச்சீட்டு பரிசோதகர், மாணவியை அலைபேசியில் ஆபாசமாக படம் பிடித்ததாக கூறப்படுகிறது.இதனை கவனித்த மாணவி அலறவே, சக பயணிகள் அதிர்ச்சியடைந்து விரைந்து சென்று மாணவியிடம் விசாரித்துள்ளனர். பயணசீட்டு பரிசோதகரின் அலைபேசியை பார்த்த சக பயணிகள், அதில் மாணவியை படம் பிடிக்க முயன்றது தெரிய வந்துள்ளது.இதுதொடர்பாக இரயில்வே உதவி எண்ணிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவே, இரயில் பெரம்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்ததும், தயாராக இருந்த இரயில்வே காவல்துறையினர் பயணசீட்டு பரிசோதகரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.இந்த விசாரணையில், அவர் சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியை சார்ந்த மேகநாதன் என்பதும் தெரியவந்துள்ளது. வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்த காவல் துறையினர், மத்திய சிறையில் காமுகனை அடைத்துள்ளனர்.
* வாணாபுரம் அருகே ரூ.2,500-க்காக முதியவரை கம்பியால் அடித்துக்கொன்றோம் - கைதான 3 வாலிபர்கள்.
* குறிஞ்சிப்பாடியில் வேன் டிரைவரை தாக்கிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்.
* கோவை தடாகம் பகுதியில் 25 செங்கல் சூளைகளில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அதிரடி சோதனை - கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு.
* அதிமுக ஆலோசனை கூட்டத்தில் காரசார விவாதம். 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைப்பதில் முடிவு எட்டப்படவில்லை. முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. கட்சியில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் செயல்பாடு குறித்து ஆலோசனை. ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு. 28 ம் தேதி அதிமுக செயற்குழு கூடுகிறது
* மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டத்திற்க்கு எதிராக வருகின்ற 25 ந்தேதி நாடு முழுவதும் முழு அடைப்புக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு.
* அரியலூர்- கலிய வரதராஜபெருமாள் கோவில் சனிக்கிழமை சாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடை.
அரியலூர் அருகிலுள்ள கல்லங்குறிச்சி கலியபெருமாள் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு புரட்டாசி மாதம் என்பதால் சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால். பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய தடை தடை விதிக்கப்பட்டது மாவட்ட நிர்வாகம்.
No comments