Header Ads

என்னை செருப்பால் அடித்து ஒரு லட்சம் கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பை ஏழை மாணவனுக்கு வழங்க தயார் - சூர்யா


✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

* ராமர் லட்சுமணனுக்கு இடையே  உள்ள புரிதல் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே இருக்கிறது - ஆர்.பி.உதயகுமார்.

* 'பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை ஐஏஎஸ் உடன் விவாதம் நடத்த நீங்கள் தயாரா?' என்ற கேள்விக்கு, "வேலியில் போற ஓணானை பிடித்து வேட்டிக்குள் விட  வேண்டும்?" என்று திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நழுவல் பதில்.

* விவசாயத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் சட்ட மசோதாக்களை மாநில அரசுகள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளிடம் முழுமையாக ஆலோசிக்காமல் மத்திய அரசு நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றி இருப்பது சரியானதல்ல. இம்மசோதாக்களில் உள்ள விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களில் திருத்தம் செய்த பிறகே மாநிலங்களவையில் அவற்றை கொண்டுவர வேண்டும். நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண்மையில் செயல்படுத்தப்படும் எத்தகைய மாற்றமும் விவசாயிகளுக்குப் பயன்தருவதாக மட்டுமே அமைய வேண்டும். அதைவிட்டு விட்டு ஏற்கனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை மேலும் வதைப்பதாக அமைந்துவிடக் கூடாது.  -டிடிவி தினகரன்.

* மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உயர்நிலைக்குழுக் கூட்டம் தலைமைக் கழக அறிவிப்பு. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டம் வருகிற  01.10.2020 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு திருச்சி - 620 001. மெக்டோனால்ஸ் ரோடு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ~பிரீஸ் ரெசிடென்ஸி-யில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும்.

* தூத்துக்குடி: தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆயுதபடைக்கு மாற்றம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை.

* மழையினால் வியாபாரம் பாதிப்பு பூ சந்தையை கோயம்பேட்டுக்கு மாற்ற வியாபாரிகள் கோரிக்கை.

* விழுப்புரம் மாவட்டம் தளவானூர் பகுதியில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத் துறையின் மூலம் தென் பெண்ணையாற்றில் ரூ 25. 35 கோடி மதிப்பீட்டில்  புதியதாக கட்டிமுடிக்கப்பட்ட அணைக்கட்டினைஅமைச்சர் சி .வி சண்முகம் விவசாயா பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் உடன் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை.

* திருச்சியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்!

திருச்சி அடுத்த  மணப்பாறையில் உள்ள கோவிந்தராஜபுரம் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து  மணப்பாறை - கோவில்பட்டி சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனை அருகே காலி குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

* சென்னை பீட்டர்ஸ் காலனி அரசு குடியிருப்பில் உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களை வீட்டை காலி செய்ய இன்று தொந்தரவு செய்து கொண்டிருக்கும் ஹவுசிங் போர்டு அதிகாரிகள்.

* அரியலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் பகுதிகளில்  7.4 மிமீ மழை பதிவாகியுள்ளது.

* நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு தருவேன் - அர்ஜூன் சம்பத்.

* என்னை அடிப்பதால் ஒரு லட்சம் கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பை ஏழை மாணவனுக்கு வழங்க தயார் - சூர்யா.

No comments

Powered by Blogger.