Header Ads

கரூர் மாவட்டத்திற்கு அருகில் 2,500 ஆண்டுகள் பழமையான கல் வட்டங்கள் கண்டுபிடிப்பு

| -மகாலட்சுமி முத்துகுமரன்.

திருச்சி: 2,500 ஆண்டுகளுக்கு மேலான மற்றும் கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய கல் பதுக்கை வட்டங்கள், தொல்பொருள் ஆர்வலர்கள் குழுவால் கரூர் மாவட்டத்தின்  அருகே  குளித்தலை இல் கண்டுபிடிக்கப்பட்டன. குளித்தலை பகுதியை சேர்ந்த தொப்பமடை எனும் கிராமத்தின் சிறிய மலைக்குன்றில் இதுபோன்ற பத்து கல்பதுக்கை வட்டங்கள் காணப்பட்டன.

கல் பதுக்கை  வட்டங்கள் என்பது ஒரு புதைகுழியின் மீது வட்ட வடிவத்தில் அமைக்கப்பட்ட கல் பலகைகளின் வரிசை. "அந்த நாட்களில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக, உடலை ஒரு சதுக்கத்தில் மற்றும் உடமைகளுடன் வைக்க ஒரு செவ்வக குழி தோண்டப்படுகிறது. அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் மீது  வட்டம் உருவாகிறது,” என்று இதனை  கண்டறிந்த "யாதும் ஊரே யாவரும் கேளிர்" தன்னார்வ குழுவின்  உறுப்பினர் வே. பார்த்திபன் கூறினார். இந்த குழு கண்டுபிடிக்கப்படாத தொல்பொருள் தளங்களைத் தேடி, தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த தளங்களைக் கண்டறிந்த, அரசு தொல்பொருள் துறைக்குத் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் காணப்பட்ட தளங்களின் அடிப்படையில்  தொப்பமடை  தனித்துவமானது என்று, அணியின் மற்றொரு உறுப்பினர் ஆர்.குமாரவேல் கூறினார்.

No comments

Powered by Blogger.